ஆய் எயினன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆய்-எயினன் அருள் உள்ளம் கொண்டவன். பறவைகளை பேணிப் பாதுகாத்துவந்தவன். இவன் ஆய் குடி என்னும் ஊரில் தோன்றிய மன்னர்களில் ஒருவன்.

இவனைப்போலவே அதிகன் என்பவனும், பறம்பு-நாட்டு அரசன் பாரியும் பறவைகளைப் பேணிப் புகலிடம் தந்தவர்கள். சோழ அரசன் சிபி புறாவின் உயிரைப் பாதுகாக்கத் தன் உடலையே பருந்துக்குத் தர முன்வந்தவன் என்பதை இங்கு நினைவுகூரலாம்.

புன்னாட்டை நன்னனிடமிருந்து மீட்டு அந்நாட்டு மக்கள் வேளிர்க்கே தருவதற்காக மிஞிலி என்பவனோடு வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் போரிட்டபோது மாண்டவன். இவன் போர்க்களத்தில் கிடந்தபோது இவன் வளர்த்த பறவைகள் வானில் வட்டமிட்டுப் பறந்து அவனுக்கு நிழல் செய்தனவாம். [1]

மேற்கோள்[தொகு]

  1. அகநானூறு 208
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்_எயினன்&oldid=3780560" இலிருந்து மீள்விக்கப்பட்டது