ஆய்வு பல்கலைக்கழகம்



ஆய்வு பல்கலைக்கழகம் அல்லது ஆய்வு-முனைப்பு பல்கலைக்கழகம் என்பது தனது முதன்மைக் குறிக்கோளாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓர் பல்கலைக்கழகம் ஆகும். ஆய்வு பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஆய்வே அடிப்படைத் தளமாக விளங்குகின்றது. இது மூன்றாம் நிலைக்கல்வி வகையிலான கல்வி நிறுவனமாகும்.[2][3][4][5] இங்கு தொழில்சார் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. ஆய்வுப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளில் பொதுத்தன்மை கொண்ட அடிப்படைக் கல்வி மட்டுமே வழங்கப்படுகின்றது; குறிப்பிட்ட துறைகளில் வல்லுநராக்குகின்ற வகையில் அவை வகுக்கப்படுவதில்லை. இருப்பினும் உய்யச் சிந்தனை போன்ற அடிப்படையான வாழ்க்கைத் திறன்களை வளர்த்தெடுப்பதால் பணியாளர்களைத் தேடும் பல நிறுவனங்கள் ஆய்வு பல்கலைக்கழகங்களின் பட்டங்களை மிகவும் மதிக்கின்றன.[6] உலகளவில், ஆய்வு பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் பொதுத்துறை பல்கலைக்கழகங்களாகவே உள்ளன. இருப்பினும் ஐக்கிய அமெரிக்கா, யப்பான் போன்ற சில நாடுகளில் புகழ்பெற்ற தனியார் ஆய்வு பல்கலைக்கழகங்களும் உள்ளன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Geiger, Roger L. (1986). To Advance Knowledge: The Growth of American Research Universities, 1900–1940 (2004 ed.). New Brunswick, New Jersey: Transaction Publishers. p. 8. ISBN 9781412840088. Archived from the original on 14 March 2023. Retrieved 28 May 2021.
- ↑ 2.0 2.1 "The role of research universities in developing countries". University World News. 11 August 2013 இம் மூலத்தில் இருந்து 5 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170905044435/http://www.universityworldnews.com/article.php?story=20130811091502202.
- ↑ Altbach, Philip G. (2011). "The Past, Present, and Future of the Research University". In Altbach, Philip G.; Salmi, Jamil (eds.). The Road to Academic Excellence: The Making of World-Class Research Universities. Washington, D.C.: The World Bank. pp. 11–32. ISBN 978-0-8213-8806-8. Archived from the original on 15 October 2022. Retrieved 15 October 2022.
- ↑ Steven Sample (2 December 2002). "The Research University of the 21st Century: What Will it Look Like?". தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம். Archived from the original on 23 February 2021. Retrieved 8 August 2018.
- ↑ John Taylor (21 June 2006). "Managing the Unmanageable: The Management of Research in Research-Intensive Universities". Higher Education Management and Policy (பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு) 18 (2): 3–4. https://www.oecd-ilibrary.org/education/managing-the-unmanageable_hemp-v18-art8-en. பார்த்த நாள்: 9 August 2018.
- ↑ Andreatta, Britt (2011). Navigating the Research University: A Guide for First-Year Students (3rd ed.). Boston: Wadsworth. p. 136. ISBN 9780495913788. Archived from the original on 14 March 2023. Retrieved 5 December 2020.