ஆய்வுக் குழு
ஓர் ஆய்வுக் குழு (study group) அல்லது கல்விக் குழு என்பது கல்வி பற்றி விவாதிக்க அடிக்கடி சந்திக்கும் ஒரு சிறிய குழுவாகும்.[1] இந்தக் குழுக்கள் உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி / பல்கலைக்கழக அமைப்பில் பரவலாகவும், தொடக்கப்பள்ளி / ஜூனியர் பள்ளி, சில நேரங்களில் நடுநிலைப்பள்ளியில் காணப்படுகின்றன. தொழில்முறை மேம்பாட்டு நிறுவனங்களும் ஆய்வுக் குழுக்களை ஊக்குவிக்கலாம். பெரிய குழு அமைப்பில் இருப்பதில் சிரமம் உள்ள மாணவர்களுக்கு இவ்வகையான ஆய்வுக் குழுக்கள் உதவியுள்ளன.
ஒவ்வொரு குழுவும் தனித்துவமானது, அதன் உறுப்பினர்களின் பின்னணியையும் திறன்களையும் பயன்படுத்தி உள்ளடக்கப்படும் கற்றல் பொருள்கள் தீர்மானிக்கப்படுகிறது. சில கல்லூரிகள் கல்விக் குழுத் திட்டங்களை ஏற்படுத்துகின்றன.
வழக்கமான கல்லூரி அளவிலான கல்விக் குழுக்களில் 5-20 மாணவர்கள், பட்டதாரி திட்டத்திலிருந்து பெறப்பட்ட ஒரு நிர்வாகி அல்லது ஆசிரியர் அல்லது ஒரு மூத்த மாணவர் ஆகியோர் அடங்குவர். தொழில்முறைக் கல்விக் குழுக்கள் பெரும்பாலும் சிறியதாக இருக்கும்.
மாணவர்கள் குழுக்களாகப் படிக்கும்போது, அவர்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தலாம். பிறகு படித்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதைக் குறைக்கலாம். மாணவர்கள், சக மாணவர்களின் படிக்கும் திறன்களைக் கவனிப்பதன் மூலம் சில படிப்புத் திறன்களையும் பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தக் குழுக்கள் உதவுகிறது. சில மாணவர்கள் வகுப்பில் ஆசிரியரிடம் தங்களது சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்பதில் தயக்கம் காட்டலாம். அவர்கள் இந்தச் சிறிய குழுவில் உள்ள ஒருவரிடம் கேள்வி கேட்பதில் அவர்களுக்கு எளிதாக இருக்கலாம். இது மாணவர்களுக்கு மிகவும் வேடிக்கையான மற்றும் நேர்மறையான அனுபவத்தை உருவாக்க முடியும். [2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Academic Skills Home". Academic Skills Center (in ஆங்கிலம்). 2017-05-25. Retrieved 2025-04-20.
- ↑ Ortiz-ortiz, Claudia. "Benefits of Group Study" (in en-us). https://www.angelesinstitute.edu/thenightingale/benefits-of-group-study.
- ↑ "10 Reasons Why You Should Form a Study Group" (in en-US). Florida National University. 2014-09-05. https://www.fnu.edu/10-reasons-form-study-group/.