உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயு அசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயு அசாரி
பிறப்புசிதி கதீஜா அசாரி
நவம்பர் 19, 1969 (1969-11-19) (அகவை 56)
ஜகார்த்தா, இந்தோனேசியா
தேசியம்இந்தோனேசியர்
பணிவடிவழகி, ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
  • விஷ்ணு ஜோடி கோண்டோகுசுமோ
  • தீமு யூசுப் இப்ராகிம்
  • மைக் திராம்ப் (2010)
பிள்ளைகள்6
விருதுகள்சிறந்த துணை நடிகைக்கான சிட்ரா விருது

சிதி கதீஜா அசாரி (Siti Kadija Azhari) (பிறப்பு 19 நவம்பர் 1969), அயு அஷாரி என்று நன்கு அறியப்பட்ட இவர் இந்தோனேசிய நடிகையும், வடிவழகியும் மற்றும் கலப்பு இந்திய மற்றும் சுந்தானிய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளரும் ஆவார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

அயு அசாரி 1969 நவம்பர் 19 அன்று [1] எச். அப்துல்லா அசாரி மற்றும் எச். ஜே கைரானி ஆகியோரின் ஏழு குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார்.[2][3] இவர்கள் குடும்பம் பங்கா தீவைச் [4] சேர்ந்தது.

தொழில்

[தொகு]

1984 ஆம் ஆண்டில் அகிபத் புவா டெர்லராங் (தடைசெய்யப்பட்ட பழத்தின் விளைவுகள்) என்ற திரைப்படத்தில் அயூ அசாரி அறிமுகமானார். பின்னர், பெர்னிககான் தாரா (குருதித் திருமணம்) என்ற மேடை நாடகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார். பின்னர், 1986 ஆம் ஆண்டில் இயக்குநர் காரியா இயக்கத்தில் இபுண்டா (தாய்) என்ற படத்தில் நடித்தார்.[1] 1989 ஆம் ஆண்டில் காரியாவின் பாக்கர் கெட்டிக்கலன் கெரேட்டா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.[5]

1990 ஆம் ஆண்டில், துவா கெகாசிஹ் (இரண்டு காதலர்கள்) படத்தில் நடித்ததற்காக இந்தோனேசிய திரைப்பட விழா சிறந்த துணை நடிகைக்கான சிட்ரா விருதைப் பெற்றார்.[1]

2000களின் முற்பகுதியில், இந்தோனேசியாவில் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒன்றாக அயு இருந்தார். இவர் ஒரு அத்தியாயத்திற்கு 20 மில்லியன் ரிங்கிட் (இந்தோனேசிய ரூபாய்) (US$2,200) சம்பாதித்ததாக வதந்தி பரவியது. ஆனால் அந்த வதந்தியை மறுத்தார். துங் இந்துங் என்ற இசைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டார்.[1]

நூல் வெளியீடு

[தொகு]

2003 ஆம் ஆண்டில், அசாரி தனது சகோதரி சாரா, இரகசியமாக எடுக்கப்பட்ட ஒரு காணொளியில் ஆடைகளை மாற்றுவது போல் சித்தரிக்கப்பட்ட பல பெண் பிரபலங்களில் ஒருவராக இருந்ததை அடுத்து, பார்வை மோகத்தின் ஆபத்துகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார். புத்தகத்திற்கான ஆராய்ச்சியில் பார்வை மோகத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் செய்வதும் அடங்கும். இவரது இப்புத்தகத்தை மூன்று வெளியீட்டாளர்கள் வெளியிட முன்வந்தனர்.[6]

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அசாரி பங்கன் சமையல் குறிப்புகள் நிறைந்த சமையல் புத்தகத்தை வெளியிட்டார்.[4]

அரசியல் கட்சி

[தொகு]

2010 ஆம் ஆண்டில், அசாரி இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சியின் சுகபூமி மாகாணத்தின் துணை ஆட்சியர் பதவிக்கு போட்டியிட பதிவு செய்தார்.[7] இவர் தனது பிரச்சாரத்தில் 10 பில்லியன் டாலரை (US$1.1 மில்லியன்) முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.[8] இவரது அரசியல் பிரச்சாரத்தின் போது, இவரது எதிரிகள் இவரைப் போன்ற ஒரு பெண்ணின் கவர்ச்சியான படங்களை பொது வெளியில் பரப்பினர். இதனை தன்னை இழிவுபடுத்தும் முயற்சியாக எடுத்துக் கொண்டார்.[9] இறுதியில் இவர் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[7]

சொந்த வாழ்க்கை

[தொகு]

அயு அசாரி பல முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் திருமணம் 1990 இல் விஷ்ணு ஜோடி கோண்டோகுசுமோ என்பவருடன் நடந்தது. அவருடன் இவருக்கு ஒரு மகன் இருந்தார்.[10] நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் தீமு யூசுப் இப்ராகிம் என்பவரை மணந்தார். இப்ராகிம் மூலம் இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார்.[11] 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் ஒயிட் லயன் என்ற இசைக்குழுவின் இசைக்கலைஞர் மைக் டிராம்பை மணந்தார். இவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளனர் .[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 Tempo 2001, Their faces haunt.
  2. ↑ "Lama Tak Terlihat, Begini Kabar 5 Anggota Keluarga Azhari. Makin Hits! - BaBe". Archived from the original on 13 October 2017. Retrieved 13 October 2017.
  3. ↑ "Lukman Azhari yang Menjadi Perbincangan Netizen Setelah Menikahi Medina Zein". 21 August 2017.
  4. 1 2 The Jakarta Post 2011, Ayu Azhari releases.
  5. ↑ Tempo 1988, Dipanggil Khadijah.
  6. ↑ Tempo 2003, Ayu Azhari.
  7. 1 2 The Jakarta Post 2010, Ayu lost candidacy.
  8. ↑ The Jakarta Post 2010, Ayu shows it’s.
  9. 1 2 The Jakarta Post 2010, Ayu Azhari ever.
  10. ↑ Tempo 1990, Kawin tanpa ramai-ramai.
  11. ↑ The Jakarta Post 2010, Ayu’s sons say.

நூல் ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயு_அசாரி&oldid=4491862" இலிருந்து மீள்விக்கப்பட்டது