ஆயுத எழுத்து (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆயுத எழுத்து
ஆயுத எழுத்து (தொடர்).png
வகைகுடும்பம்
காதல்
நாடகம்
இயக்குனர்பிரம்மா
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சாய் கணேஷ் பாபு
ஜெகதிலன்
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்15 சூலை 2019 (2019-07-15) –
ஒளிபரப்பில்

ஆயுத எழுத்து என்பது விஜய் தொலைக்காட்சியில் 15 சூலை 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி, மார்ச் 16, 2020 முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பத் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் இந்திரா கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க இவருக்கு ஜோடியாக ஆனந்த் என்பவர் சக்தி வேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். காளியம்மாவாக மௌனிகா நடிக்கிறார்.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

கிராமத்துக்கு தான் செய்வதுதான் நல்லது என்று அடிதடி, அடாவடி என வாழ்பவர் காளியம்மா. அரசு அதிகாரிகள், வெளியாட்கள் மீது நம்பிக்கை இல்லாதவர். துணை ஆட்சியரான இந்திரா அந்த கிராமத்துக்கு வருகிறார். இவர்கள் இருவருக்கும் மோதல் ஆரமிப்பிக்கின்றது.

இந்நிலையில் காளியம்மா மகன் சக்திவேலுக்கும், இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவுக்கு தெரியவில்லை. இந்த காதல் காளியம்மாவுக்கும் மற்றும் இந்திராவுக்கு உண்மை தெரியும்போது அவர் எடுக்கும் முடிவு என்ன? என்பது தான் இந்த தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ஸ்ரீது கிருஷ்ணன் → சரண்யா - இந்திரா
 • அம்ஜத்கான் → ஆனந்த் - சக்திவேல்
 • மௌனிகா - காளியம்மா

துணை கதாபாத்திரம்[தொகு]

 • சியமந்தா கிரண் - கோதை
 • சங்கர பாண்டியன்
 • ஜனனி அசோக் குமார் - மேகலா
 • அழகு - சேதுராமன்
 • டீனு - கஸ்தூரி
 • பிரியா விஷ்வா - ஜானகி
 • அகில் குமார் - அகில்
 • ரத்ன ராஜ்
 • ரேவதி - சௌந்தர்யா நஞ்சுண்டன்
 • சந்தோஷ் செல்வராஜ் - அறிவு
 • ஜீவா ரவி
 • ஸ்ரீலதா

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் துணை ஆட்சியர் இந்திராவாக ஸ்ரீது கிருஷ்ணன் நடித்தார். அதற்க்கு பிறகு இவரின் கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்கின்றார். பிரபல நடிகை மௌனிகா என்பவர் காளியம்மா என்ற கதாபாத்திரத்திலும், இவரின் மகனாக அம்ஜத்கான் என்பவர் சக்தி வேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு பதிலாக தற்பொழுது ஆனந்த் நடிக்கின்றார்.

நேர அட்டவணை[தொகு]

இந்த தொடர் சூலை 15 2019 முதல் மார்ச் 14, 2020 ஆம் ஆண்டு வரை வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை 7 மணிக்கு ஒளிபரப்பானது. பாக்கியலட்சுமி என்ற தொடருக்காக மார்ச் 16, 2020 முதல் மாலை 6 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
15 சூலை 2019 - 14 மார்ச் 2020
திங்கள் - சனி
19:00 1-210
16 மார்ச் 2020 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
18:00 211-

மறு ஆக்கம்[தொகு]

 • கன்னடம்
  • இந்த தொடர் கன்னட மொழியில் சங்கர்ஷா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஸ்டார் சுவர்ணா என்ற தொலைக்காட்சியில் மார்ச் 23, 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6 மணிக்கு
Previous program ஆயுத எழுத்து
(16 மார்ச் 2020 - ஒளிபரப்பில்)
Next program
சிவா மனசுல சக்தி
(21 சனவரி 2019 – 14 மார்ச் 2020)
-
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி இரவு 7 மணிக்கு
Previous program ஆயுத எழுத்து
(15 சூலை 2019 - 14 மார்ச் 2020)
Next program
ராஜா ராணி
(29 மே 2017 – 13 சூலை 2019)
பாக்கியலட்சுமி
(16 மார்ச் 2020 - ஒளிபரப்பில்)