ஆயிஷா தாக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிசா தாக்கியா

இயற் பெயர் ஆயிசா தாக்கியா
பிறப்பு ஏப்ரல் 10, 1986 (1986-04-10) (அகவை 37)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
வேறு பெயர் ஆயிசா தாக்கியா ஆசுமி
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2004 - நடப்பு
துணைவர் ஃபர்ஃகன் ஆசுமி (2009 - நடப்பு)

ஆயிசா தாக்கியா ஆசுமி, (இந்தி: आयेशा टाकिया आजमी, Ayesha Takia, ஆயிஷா தாக்கியா; பிறப்பு: ஏப்ரல் 10, 1986)[1]) பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆயிசா தாகியா மும்பையில் குசராத்தியான நிசித் என்பவருக்கும், மகாராட்டிரத்தை சார்ந்த ஆங்கிலோ இந்தியரான பரிதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவருக்கு நடாசா என்ற இளைய சகோதரி உள்ளார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

ஆயிஷா "நான் ஒரு காம்ப்ளான் பெண்" என்ற விளம்பரப்படத்தில் நடித்ததில் இருந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய பதினைந்தாவது வயதில் பால்குனி பாதக்கின் மேரி சுனரி உத் உத் சாயே என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் தோன்றினார். இதன் பிறகு பதினாறாவது வயதில் சேக் இட் டாடி என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன; சோச்சா நா தா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சோச்சா நா தா படத் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதால், டார்சான்: தி வொண்டர் கார் என்ற படம் இவருடைய அறிமுகப்படமானது. இப்படத்தில் நன்றாக நடித்ததற்காக 2004ம் ஆண்டுக்கான பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதினை ஆயிசா வென்றார். நாகேசு குக்குநூரின் டோர் படத்தில் தரன் ஆதர்சுடன் இணைந்து நடித்து அதற்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். இதன் பின்னர் மற்ற நடிகைகள் ஆரம்ப கட்டத்தில் ஏற்கத் தயங்கும் கவர்ச்சியற்ற வேடங்களில் நடிக்க சம்மதித்தார்.[2] சூப்பர் என்ற தெலுங்குப் படத்தில் அக்கினேனி நாகார்சுனாவுடன் நடித்தார். 2009 இல் சல்மான் கானுடன் ஆயிசா இணைந்து நடித்த ""வாண்டட்"" என்ற பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[1] பரணிடப்பட்டது 2012-07-12 at Archive.today

சொந்த வாழ்க்கை[தொகு]

ஆயிஷா 2009 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று, இசுலாமிய திருமண வழக்கப்படி பர்கன் அசுமியை மணந்தார். பர்கன் ஆசுமி சமாஜ்வாதி கட்சி தலைவர் அபு அசுமி யின் மகனும் உணவக விடுதி உரிமையாளரும் ஆவார்.[3]

விருதுகள்[தொகு]

  • 2005, பிலிம்பேர் சிறந்த அறிமுக விருது (படம்: டார்சான்:தி வொண்டர் கார்)
  • 2004, ஐஐஎப்எ அறிமுக நட்சத்திரம்
  • 2005, நட்சத்திரங்களின் நீங்கள் விரும்பும் கதாநாயகி
  • 2007, டோர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான இசுடார் இசுக்ரீன் விருது
  • 2007, டோர் படத்திற்காக இசுடார்டசுட் சிறந்த துணை நடிகை விருது
  • 2007, டோர் படத்திற்காக பெங்கால் சினிமா பத்திரிக்கையாளர்கள் குழுமத்தின் சிறந்த நடிகைக்கான விருது
  • 2007, டோர் படத்திற்காக குல் பனாகுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான ஜீ சினிமா விருது

திரைப்பட விவரங்கள்[தொகு]

திரைப்படம் ஆண்டு பாத்திரம் மற்ற குறிப்புகள்
டார்சன்: தி வொண்டர் கார் 2004 பிரியா ராகேசு கபூர் வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுக விருது
தில் மாங்கே மோர் 2004 ஷகுன்
சோச்சா நா தா 2004 அதிதி
ஷாதி நம்பர் 1 2005 பாவனா
சூப்பர் 2005 சிரி வள்ளி தெலுங்கு திரைப்படம்
ஹோம் டெலிவர்: ஆப்கோ கர் தக் 2005 ஜென்னி
சாதி சே பெக்லே 2006 ராணி
யூம் கோதா தொ க்யா கோதா 2006 குசுபூ
டோர் 2006 மீரா
சலாம்-ஈ-இஷ்க் 2007 கிய பக்சி
கியா லவ் இசுடோரி அய் 2007 காசல் மெக்ரா
பூல் அண்ட் பைனல் 2007 டினா
கேசு (ரொக்கம்) 2007 ரியா சிறப்புத் தோற்றம்
ப்ளட் பிரதர்சு (இரத்த சகோதரர்கள்) 2007 கேய குறும்படம்
நோ இசுமோக்கிங் 2007 அஞ்சலி / ஆனி இரட்டை வேடம்
சண்டே 2008 சேகர் தபார்
தே தாலி 2008 அம்ரிதா "அமு"
8 X 10 தசுவீர் 2009 சீலா முதல் எதிர்மறை கதாபாத்திரம்
வான்டட் 2009 சான்வி
பாத்சாலா 2009 சோனியா
அப் டில்லி தூர் நகின் 2009 சிறுத்தை அறிவிப்பு
அசைப்படம்
எம்ஓடி(MOD) 2011 ஆரன்யா மகா தேவ்
ஆப் கே லியே அம் 2013 தமன்னா

குறிப்புதவிகள்[தொகு]

  1. "IMDb Biography for Ayesha Takia".
  2. "Dor Review".
  3. ""Ayesha Takia Weds Farhan Azmi"". Archived from the original on 2012-01-05. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.

வெளி இணைப்புகள்[தொகு]

விருதுகள்
பிலிம்பேர் விருது
முன்னர்
பிரியங்கா சோப்ரா மற்றும் லாரா தத்தா
அந்தாஸ்
சிறந்த அறிமுக நடிகை
டார்சான்: தி வொண்டர் கார் & தில் மாங்கே மோர்

2004
பின்னர்
வித்யா பாலன்
பரிநீத்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிஷா_தாக்கியா&oldid=3793895" இலிருந்து மீள்விக்கப்பட்டது