ஆயிஷா சவுத்ரி
ஆயிஷா கவுர் சவுத்ரி | |
|---|---|
2013 ஆம் ஆண்டில் புனேயில் நடைபெற்ற டெட் மாநாட்டில் சவுத்ரி | |
| பிறப்பு | 27 மார்ச்சு 1996 புது தில்லி, தில்லி, இந்தியா[1] |
| இறப்பு | 24 சனவரி 2015 (அகவை 18) குருகிராம், அரியானா, இந்தியா |
| இறப்பிற்கான காரணம் | நுரையீரல் தொற்றுநோய் |
| தேசியம் | இந்தியர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | அமெரிக்க தூதரக பள்ளி, புது தில்லி |
| பணி |
|
| அறியப்படுவது |
|
ஆயிசா சவுத்ரி (Aisha Chaudhary) (27 மார்ச்சு 1996 – 24 சனவரி 2015) ஒரு இந்திய எழுத்தாளரும் ஊக்கமூட்டும் பேச்சாளரும் ஆவார். மை லிட்டில் எபிபேனியெசு (My Little Epiphanies) என்ற நூலை எழுதியவர் ஆவார். இந்த நூல் இவர் இறப்பதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டது.[2] 2019 ஆம் ஆண்டில் தி ஸ்கை இஸ் பிங்க் (The Sky is Pink) என்ற இந்தி மொழித் திரைப்படமானது இவரது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]சவுத்ரி நிரென் சவுத்ரியின் மகள் ஆவார், பின்னர் இவர் யம்! பிராண்ட்ஸ் மற்றும் பனேரா பிரெட் ஆகியவற்றின் தெற்காசிய நடவடிக்கைகளின் தலைவரானார். இவரது தாயார் அதிதி ஒரு மனநலம் சார்ந்த பணியாளர் ஆவார். இவருக்கு இஷான் சவுத்ரி என்ற மூத்த சகோதரரும், தன்யா சவுத்ரி என்று ஒரு மூத்த சகோதரியும் இருந்தனர். சவுத்ரி கடுமையான ஒருங்கிணைந்த நோயெதிர்ப்பு குறைபாட்டுடன் (Severe combined immunodeficiency) பிறந்தார். இவருக்கு ஆறு மாத வயதாக இருந்தபோது, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தது.[3] 2009 ஆம் ஆண்டில், நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்ற கடுமையான நோய் இவரை பாதித்தது. இது நுரையீரலின் மீளமுடியாத வடுக்களை ஏற்படுத்தும் ஒரு வகை நிலை. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக எடுத்த வேதிச்சிகிச்சையின் பக்க விளைவின் காரணமாக இந்த நிலை இவருக்கு ஏற்பட்டது.[4][5]
தொழில் வாழ்க்கை
[தொகு]
சவுத்ரி தனது 15 வயது முதல் தான் இறக்கும் வரை ஊக்கமளிக்கும் உரைகளை நிகழ்த்தினார். இவர் ஒரு ஐஎன்கே ஃபெலோவாக பெயரிடப்பட்டார் மற்றும் 2011 மற்றும் 2013 ஐஎன்கே மாநாடுகளில் பேசினார்.[6] சவுத்ரி 2013 இல் டெட் மாநாட்டில் பேச்சாளராகவும் இருந்தார்.
தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதியவர் ஆவார்.[7][8]
பிற ஊடகங்களில் பிரதிநிதித்துவம்
[தொகு]சோனாலி போஸ் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தி ஸ்கை இஸ் பிங்க் என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா, நிரென் சவுத்ரியாக பர்கான் அக்தர், ஆயிஷா சவுத்ரியாக சாய்ரா வாசிம் இஷான் சவுத்ரிகளாக ரோஹித் சுரேஷ் சரஃப் ஆகியோர் நடித்துள்ளனர், இத்திரைப்படம் 11 அக்டோபர் 2019 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[9]
நெட்ஃபிக்ஸ் இல் வெளியான பிளாக் சன்ஷைன் பேபி என்ற ஆவணப்படம் இவரது வாழ்க்கையைப் பற்றியது.
படைப்பு
[தொகு]- மை லிட்டில் எபிஃபேனிஸ் (2015), வாழ்க்கையைப் பற்றிய இவரது எண்ணங்களை உள்ளடக்கியதும் வாழ்க்கையில் இதுபோன்ற கஷ்டங்களைச் சந்திக்க மற்றவர்களுக்கு உதவக்கூடியதுமான இவரது பயணத்தைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியது.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Real Se Reel Tak, Movie Review.". Retrieved 16 September 2019.
- ↑ "Pendrive: Remembering Aisha Chaudhary". The Indian Express (in ஆங்கிலம்). 2015-01-25. Retrieved 2024-04-17.
- ↑ "Who is Aisha Chaudhary, the inspiration behind The Sky Is Pink?". The Indian Express (in ஆங்கிலம்). 2019-10-10. Retrieved 2024-04-17.
- ↑ Vasudevan, Shilpa Kappur (2014-10-04). "The Girl Who Just Won't Give Up". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-04-17.
- ↑ India, Aaj (2019-09-16). "The Real Faces Behind Bollywood Biopics: "Real Se Reel Tak"". Aaj India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 4 December 2024. Retrieved 2024-11-29.
- ↑ "Singing in the life boat". inktalks.com (in ஆங்கிலம்). Archived from the original on 12 July 2018. Retrieved 11 July 2018.
- ↑ Vasudevan, Shilpa Kappur (2014-10-04). "The Girl Who Just Won't Give Up". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-04-17.
- ↑ "Redirecting". tedxtalks.ted.com. Archived from the original on 7 October 2019. Retrieved 11 July 2018.
- ↑ "Priyanka Chopra's The Sky Is Pink gets a release date". The Indian Express (in ஆங்கிலம்). 2019-02-21. Retrieved 2024-04-17.
- ↑ Bloomsbury.com. "My Little Epiphanies". Bloomsbury Publishing (in ஆங்கிலம்). Archived from the original on 14 June 2021. Retrieved 11 July 2018.
- ↑ Lawrence, Victor. ""Real Se Reel Tak" – The real face of characters in upcoming Bollywood Biopics". Digital World (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 3 August 2020. Retrieved 16 September 2019.