ஆயிரம் விளக்கு (சென்னை)

ஆள்கூறுகள்: 13°03′42.1″N 80°15′15.8″E / 13.061694°N 80.254389°E / 13.061694; 80.254389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரம் விளக்கு (சென்னை)
ஆயிரம் விளக்கு
புறநகர்ப் பகுதி
ஆயிரம் விளக்கு (சென்னை) is located in சென்னை
ஆயிரம் விளக்கு (சென்னை)
ஆயிரம் விளக்கு (சென்னை)
ஆயிரம் விளக்கு (சென்னை) is located in தமிழ் நாடு
ஆயிரம் விளக்கு (சென்னை)
ஆயிரம் விளக்கு (சென்னை)
ஆயிரம் விளக்கு (சென்னை) is located in இந்தியா
ஆயிரம் விளக்கு (சென்னை)
ஆயிரம் விளக்கு (சென்னை)
ஆள்கூறுகள்: 13°03′42.1″N 80°15′15.8″E / 13.061694°N 80.254389°E / 13.061694; 80.254389
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600002
தொலைபேசி குறியீடு044xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை (சென்னை), நுங்கம்பாக்கம், பூங்கா நகர் (சென்னை), பெரியமேடு, புரசைவாக்கம், இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்தயாநிதி மாறன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மருத்துவர் எழிலன் நாகநாதன்
இணையதளம்https://chennaicorporation.gov.in

ஆயிரம் விளக்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி. இன்றைய ஆயிரம் விளக்குப் பகுதிக்கு பல்வேறு வரலாற்று தகவல்கள் காணப்படுகின்றன. இப்பகுதி 18ம் நூற்றாண்டில் ஹிந்துஸ்தானியில் நக்சா என்று அறியப்பட்டது. 1795ல் கட்டப்பட்ட ஒரு கட்டடம், நவாப் உம்தத் உல்மாரா என்பவரால் மொகரம் பண்டிகையின் போது ஷியா இனத்தவர்கள் ஒன்றாகக் கூடுவதற்காகக் கட்டப்பட்டது.[1] ஆரம்ப காலத்தில் ஷியா இனத்தவர்கள் மொகரம் பண்டிகைக்காக கூடும் போது, இந்தப் பகுதியில் ஆயிரம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்தே இப்பகுதி ஆயிரம் விளக்கு என்ற பெயர் பெற்றுள்ளது.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள்: 13°03'42.1"N, 80°15'15.8"E (13.0617°N, 80.2544°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், பெரியமேடு, பூங்கா நகர் (சென்னை), புரசைவாக்கம், புதுப்பேட்டை (சென்னை), சேத்துப்பட்டு, கோபாலபுரம் ஆகியவை ஆயிரம் விளக்கு பகுதிக்கு அருகிலுள்ள ஊர்கள்.

கல்வி[தொகு]

பள்ளிகள்[தொகு]

பெண்ணியம் போற்றிய திரு. வி. க., ஆண்கள் போலவே பெண்களும் அனைத்துரிமைகளையும் பெற வேண்டும்; அதற்கு பெண் கல்வி அவசியம் என்று வலியுறுத்தினார். அதற்காகப் பெண்களுக்கான பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உருவாக வேண்டும் என்றார். அதற்கு முன்னோடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 'பவானி பாலிகா' என்ற பள்ளியை அவர் தொடங்கினார். அந்தப் பள்ளியை சிறப்பாக நடத்தினார். ஒழுக்க நெறிகள், சுகாதார வழி முறைகள், சுதேசிப் பற்று போன்ற பாடங்கள் அங்கு கற்பிக்கப்பட்டன.[2]

ஆரம்ப காலத்தில்,சென்னை ஆயிரம் விளக்கு வெஸ்லியன் மிஷன் பள்ளி ஆதிதிராவிடர்க்கென்று காணப்பட்டது. மற்றவரும் பள்ளியில் சேரலாம். ஆனால் இவர் மதிப்பெண் தொகை நூற்றுக்கு நாற்பதாயிருத்தல் வேண்டும். பாலர் வகுப்பு முதல் மூன்றாம் பாரம் வரை வகுப்புகளுண்டு. அந்நாளில் ஆதிதிராவிடர்க்கென்று மாகாணத்தில் அமைந்த பள்ளிகளில் ஆயிரம் விளக்குப் பள்ளியே சிறந்ததாகவும் பெரியதாயும் விளங்கியது.[3]

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியை சென்னையின் மற்ற பகுதிகளுடன் எளிதாக இணைக்கிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவைகள் அதிகம் கிடைக்கின்ற பகுதியாகத் திகழ்கிறது. வெளியூர் பேருந்து சேவைகளும் ஆயிரம் விளக்கு பகுதிக்குக் கிடைக்கின்றன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

ஆயிரம் விளக்கு மெட்ரோ, எல்.ஐ.சி. மெட்ரோ, ஏ.ஜி. டி.எம்.எஸ்., அரசினர் எஸ்டேட் மெட்ரோ ஆகிய மெட்ரோ இரயில் சேவைகள் மூலம் தொடருந்து போக்குவரத்து சேவைகள் இப்பகுதிக்கு எளிதாக கிடைக்கின்றன.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

16 கி.மீ. தொலைவிலுள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம், இங்கிருந்து மற்ற மாவட்டங்கள், மற்ற மாநிலங்கள் செல்ல வழிவகை செய்கிறது.

காவலர் குடியிருப்பு[தொகு]

சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ. 186 கோடியே 51 லட்சம் செலவில் 1036 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அக்குடியிருப்புகளை திறந்து வைத்தார்.[4] உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 55.19 கோடி மதிப்பீட்டில் 253 வீடுகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.[5]

ஆயிரம் விளக்கு மசூதி[தொகு]

இங்குள்ள ஆயிரம் விளக்கு மசூதி, உலகெங்கிலும் உள்ள ஷியா இனத்தவர்களிடையே மதிக்கப்படும் முகமது நபியின் பேரனான இமாம் ஹூசைனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இசுலாமிய வடிவமைப்பில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு மசூதி, இடைக்கால கட்டிடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. பல குவிமாடங்கள் மற்றும் உயர்ந்த மினாரட்டுகள் உள்ளன. மசூதியின் தர்கா இரண்டாவது மாடியில் உள்ளது. ஆண்கள் நமாஸ் கூடும் பிரதான மண்டபம் தரை தளத்தில் உள்ளது. பெண்கள் தொழுகை நடத்த மசூதியில் தனி அறை உள்ளது. ஒரு நூலகம், விருந்தினர் மாளிகை, இமாம் ஹூசைன் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியவை உள்ளன. மொகரம் பண்டிகை நாளில் மசூதி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.

மருத்துவ வசதிகள்[தொகு]

அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ மருத்துவமனை, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை இங்கு அமைந்துள்ளன.

பொழுதுபோக்கு[தொகு]

அருகிலுள்ள செம்மொழி பூங்கா, ஆயிரம் விளக்கு பகுதி மட்டுமல்லாது, சென்னை முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொழுதுபோக்கு இடம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆயிரம் விளக்கு". Dinamalar.
  2. செவல்குளம் ஆச்சா (2006) (in ta). தமிழ்த்தென்றல் திரு. வி. க. சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட். பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174789037, 8174789030. https://books.google.co.in/books?id=G_c1qdcKRPUC&pg=PA35&dq=%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81,+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&sa=X&ved=2ahUKEwjGuevnk5f6AhVGTGwGHXbKCb8Q6AF6BAgMEAM#v=onepage&q=%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88&f=false. 
  3. J. Balasubramaniam (2017) (in ta). சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை. Kalachuvadu Publications Pvt Ltd.. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789389820645, 9389820642. https://books.google.co.in/books?id=C_UBEAAAQBAJ&pg=PT2&dq=%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81,+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&sa=X&ved=2ahUKEwiLzsaTopf6AhUeR2wGHUxPAS4Q6AF6BAgDEAM#v=onepage&q=%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88&f=false. 
  4. "சென்னை ஆயிரம் விளக்கு-புதுப்பேட்டையில் போலீசாருக்கு 1632 வீடுகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்". Maalaimalar. https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-opened-chennai-thousand-lights-and-pudhupettai-new-houses-for-police-497031. 
  5. "சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1,036 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்". Dinakaran இம் மூலத்தில் இருந்து 2022-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220915173305/https://www.dinakaran.com/news_detail.asp?Nid=789631. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்_விளக்கு_(சென்னை)&oldid=3722180" இலிருந்து மீள்விக்கப்பட்டது