ஆயிரம் தீவுகள் (இந்தோனேசியா)
கெபுளாவுவான் செரீபூ
ஆயிரம் தீவுகள் | |
---|---|
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | ஜகார்த்தா |
தலைநகரம் | பிரமுகத் தீவு |
அரசு | |
• பூபதி | ஜுனைடி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.7 km2 (3.4 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 21,071 |
• அடர்த்தி | 2,400/km2 (6,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (மே.இ.நே.) |
ஆயிரம் தீவுகள் தேசிய வனம் | |
---|---|
Taman Nasional Laut Kepulauan Seribu | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | சாவகக் கடல், இந்தோனேசியா |
அருகாமை நகரம் | ஜகார்த்தா |
ஆள்கூறுகள் | 5°42′S 106°35′E / 5.700°S 106.583°E |
பரப்பளவு | 107,489 எக்டேர்கள் (265,610 ஏக்கர்கள்; 1,074.89 km2) |
நிறுவப்பட்டது | அக்டோபர் 10, 1982 |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல், காட்டுவள அமைச்சு |
வலைத்தளம் | tnlkepulauanseribu.net |
ஆயிரம் தீவுகள் (Thousand Islands), உத்தியோக பூர்வமாக கெபுளாவுவான் செரீபூ (Kepulauan Seribu) எனப்படுவது ஜகார்த்தாவின் கரையோரத்துக்கு வடக்கே காணப்படும் ஒரு தீவுக் கூட்டமாகும். இது இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் ஒரேயொரு பூதலம் ஆகும். ஆயிரம் தீவுகள் என்று கூறப்படுகின்ற போதிலும் இத்தீவுக்கூட்டத்தில் 110 தீவுகளே காணப்படுகின்றன.[2] இத்தீவுக்கூட்டம் சாவகக் கடலில் மேற்கு ஜகார்த்தாக் குடாவுக்கு வடக்கே, உண்மையில் பந்தன் மாகாணத்தின் வடக்கே 45 கிமீ (28 மைல்) பரவிக் காணப்படுகிறது.
பல்லாண்டு காலத்துக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஓர் அரசாங்கக் கட்டளையின்படி[3] இத்தீவுகளில் 36 தீவுகள் கேளிக்கைக்காகப் பயன்படுத்தப்படலாம். இந்த 36 தீவுகளில் 13 தீவுகள் மாத்திரமே முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11 தீவுகளில் கட்டிடங்கள், ஓய்வு விடுதிகள் போன்றவை காணப்படுகின்ற அதே வேளை, இரு தீவுகள் வரலாற்று முக்கியத்துவத்துக்காக தொல்லியற் களங்களாகப் பேணப்படுகின்றன. இத்தீவுக் கூட்டத்தில் இருபத்து மூன்று தீவுகள் தனியாருக்கு உரித்தானவையாதலின் பொதுமக்களுக்காக அவை திறந்து விடப்படுவதில்லை.[4] ஏனைய தீவுகள் யாவும் ஒன்றில் மக்கள் குடியிருப்பற்றவையாகவோ மீனவக் குடியிருப்புக்களைக் கொண்டவையாகவோ இருக்கின்றன.[4]
படக் காட்சி
[தொகு]ஆயிரம் தீவுகள் தீவுக்கூட்டத்தின் வானிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Gubernur Provinsi DKI Jakarta Lantik Bupati Kepulauan Seribu" (in இந்தோனேஷியன்). 4 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ SK Gubernur KDKI No. 1986/2000
- ↑ (SK Gubernur KDKI No. 1814/198
- ↑ 4.0 4.1 PARIWISATA KEPULAUAN SERIBU: Potensi Pengembangan dan Permasalahannya