ஆயிசா குலாலை வசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிசா குலாலை வசீர்
பாக்கித்தானின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1 சூன் 2013 – 31 மே 2018
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் (2012-2017)
பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்-குலாலை (2018-தற்போது வரை)
உறவினர்கள்மரியா தூர்பகை வசீர் (சகோதரி)[1]

ஆயிசா குலாலை வசீர் (Ayesha Gulalai Wazir) பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார். இவர் 2013 முதல் மே 2018 வரை பாக்கித்தானின் தேசிய சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர், பாக்கித்தானின் சுவர்ப்பந்து வீரரான மரியா தூர்பகை வசீரின் சகோதரியாவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

ஆயிசா குலாலை, பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் பிறந்தார். பின்னர், பெசாவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1] பட்டம் பெற்ற பிறகு, இவர் சிலகாலம் ஒரு பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். முதலில் பெசாவரின் பாக்கித்தான் தொலைக்காட்சியிலும், பின்னர் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பஷ்தூ மொழிச் செய்தித் தொகுப்பாளராக பணியாற்றினார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பன்னு மாவட்டத்திலிருந்து ஒரு மனித உரிமை ஆர்வலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[3] இவர் பாக்கித்தான் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.[2][4] இவர் அனைத்து பாக்கித்தான் முஸ்லிம் லீக்கின் உறுப்பினராகவும் இருந்தார்.[1][2] பிபிபிபி தேசிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 2008 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் இவருக்கு கட்சி வாய்ப்பு வழங்குவதாக பரிசீலித்தது என கூறப்பட்டது. ஆனால் வயது பிரச்சினை காரணமாக இவரால போட்டியிட முடியவில்லை.[2][3]

தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுதல்[தொகு]

2012 இல், இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சியில் சேர்ந்தார்.[5] and was nominated as a member of the PTI central committee.[3] பின்னர் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[3] 2013 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளிலிருந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி வேட்பாளராக பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்திற்கு வசீர் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][6][7][8] இவர் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் முதல் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினர்களில் ஒருவராகவும் ஆனார்.[2]

புதிய கட்சித் தொடக்கம்[தொகு]

2017 ஆகத்தில் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சியிலிருந்து விலகினார். கட்சி பெண்களுக்கு மரியாதை மற்றும் கௌரவத்திற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அக்டோபர் 2013இல் தனக்கு அனுப்பப்பட்ட தவறான குறுஞ்செய்திகளுக்கு இம்ரான் கான் மீது இவர் குற்றம் சாட்டியுள்ளார் [9][10][11] மேலும் தேசிய சட்டமன்றத்தில் இருந்து விலகவும் இவர் மறுத்துவிட்டார்.[12]

பிப்ரவரி 2018 இல், இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் (குலாலாய்) (பிடிஐ-ஜி),[13] என்ற தனது சொந்த கட்சியை பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சியின் ஒரு பிரிவாக தொடங்கினார்.[14] பாக்கித்தானின் தேர்தல் ஆணையம் இந்த ராக்கெட் சின்னத்தை இவரது கட்சிக்கு தேர்தல் அடையாளமாக ஒதுக்கியது.[15] கட்சி மக்களாட்சியின் வடிவத்தை ஆதரிக்கிறது.[16]

2018 பாக்கித்தான் பொதுத் தேர்தலுக்கு, இவரது கட்சி நான்கு திருநங்கைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.[17][18]

2018 தேர்தல்[தொகு]

என்ஏ-25 (நௌசீரா-I) தொகுதியிலிருந்து பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் (குலாலாய்) கட்சியின் வேட்பாளராக வசீர் தேசிய சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டார். தொகுதி என்ஏ-53 (இஸ்லாமாபாத்- II), தொகுதி என்ஏ-161 (லோத்ரன்n-II) , 2018 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் என்ஏ-231 (சுஜாவால்) ஆகிய தொகுதியில் போட்டியிட்ட கட்சி என்ஏ-231 (சுஜாவால்) மட்டும் வெற்றிபெற்றது. பிற இடங்களில் தோல்வியடைந்தது.[19][20]

மே 2019 இல், குலாலாய் அவரது கட்சியை (பிபிபி) பிடிஐ-ஜி உடன் இணைக்குமாறு பிலாவல் பூட்டோ சர்தாரியிடம் கேட்டார். ஏனெனில் அது ஏற்கனவே ஒரு மாகாணத்தில் மட்டும் செல்வாக்கு கொண்டிருந்தது.[21]

2018 பொதுத் தேர்தலில், பிடிஐ-ஜி தேசிய சட்டமன்றத்தில் 4.130 வாக்குகளையும், மாகாண சபையில் 1,235 வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது.[22] கட்சியின் வேட்பாளர்கள் யாரும் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Inspired by Benazir, PTI's Aisha Gulalai seeks empowerment of tribal women - The Express Tribune". The Express Tribune. 6 June 2013 இம் மூலத்தில் இருந்து 4 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170304040939/https://tribune.com.pk/story/559692/inspired-by-benazir-ptis-aisha-gulalai-seeks-empowerment-of-tribal-women/. பார்த்த நாள்: 3 March 2017. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "What Ayesha Gulalai’s past tells us about her?". www.geo.tv. 8 August 2017 இம் மூலத்தில் இருந்து 8 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170808125246/https://www.geo.tv/latest/152880-what-ayesha-gulalais-past-tells-us-about-her. பார்த்த நாள்: 8 August 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Making history: Vernal parliamentarian set to shine on political stage - The Express Tribune". The Express Tribune. 30 May 2013 இம் மூலத்தில் இருந்து 4 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170304114022/https://tribune.com.pk/story/556256/making-history-vernal-parliamentarian-set-to-shine-on-political-stage/. பார்த்த நாள்: 3 March 2017. 
  4. "PTI accuses govt of impeding peace march" (in en). DAWN.COM. 5 October 2012 இம் மூலத்தில் இருந்து 4 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170304114132/https://www.dawn.com/news/754558/pti-accuses-govt-of-impeding-peace-march/newspaper/column. பார்த்த நாள்: 3 March 2017. 
  5. "Switching alliances : Former APML member joins PTI - The Express Tribune". The Express Tribune. 6 October 2012 இம் மூலத்தில் இருந்து 4 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170304193123/https://tribune.com.pk/story/447585/switching-alliances-former-apml-member-joins-pti/. பார்த்த நாள்: 3 March 2017. 
  6. "Painting, calligraphy exhibition gets encouraging response" (in en). www.thenews.com.pk இம் மூலத்தில் இருந்து 4 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170304114412/https://www.thenews.com.pk/print/73393-painting-calligraphy-exhibition-gets-encouraging-response. பார்த்த நாள்: 3 March 2017. 
  7. "PML-N secures most reserved seats for women in NA - The Express Tribune". The Express Tribune. 28 May 2013 இம் மூலத்தில் இருந்து 4 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170304195047/https://tribune.com.pk/story/555511/pml-n-secures-most-reserved-seats-for-women-in-na/. பார்த்த நாள்: 7 March 2017. 
  8. "Women, minority seats allotted" (in en). DAWN.COM. 29 May 2013 இம் மூலத்தில் இருந்து 7 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170307205110/https://www.dawn.com/news/1014677. பார்த்த நாள்: 7 March 2017. 
  9. "MNA Ayesha Gulalai decides to quit PTI | SAMAA TV". Samaa TV இம் மூலத்தில் இருந்து 1 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170801121007/https://www.samaa.tv/pakistan/2017/08/mna-ayesha-gulalai-decides-to-quit-pti/. பார்த்த நாள்: 1 August 2017. 
  10. "PTI MNA Ayesha Gulalai quits party citing 'ill-treatment' of women" (in en). DAWN.COM. 1 August 2017 இம் மூலத்தில் இருந்து 3 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170803001736/https://www.dawn.com/news/1348958/pti-mna-ayesha-gulalai-quits-party-citing-ill-treatment-of-women. பார்த்த நாள்: 1 August 2017. 
  11. Zahra-malik, Mehreen (5 August 2017). "Female Lawmaker in Pakistan Accuses Imran Khan of ‘Inappropriate’ Texts. Abuse Follows.". The New York Times இம் மூலத்தில் இருந்து 10 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170810232419/https://www.nytimes.com/2017/08/05/world/asia/pakistan-women-social-media.html. பார்த்த நாள்: 10 August 2017. 
  12. "Gulalai says she will not resign from NA seat" (in en). DAWN.COM. 7 August 2017 இம் மூலத்தில் இருந்து 9 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170809223939/https://www.dawn.com/news/1350161. பார்த்த நாள்: 10 August 2017. 
  13. "Gulalai officially announces her party, says PML-N ministers should be sent to jail - Daily Times". Daily Times. 24 February 2018. https://dailytimes.com.pk/206662/gulalai-officially-announces-party-says-pml-n-ministers-sent-jail/. பார்த்த நாள்: 28 February 2018. 
  14. "Ayesha Gulalai to launch her 'own faction of PTI' - The Express Tribune". The Express Tribune. 29 December 2017. https://tribune.com.pk/story/1596078/1-ayesha-gulalai-launch-faction-pti/. பார்த்த நாள்: 28 February 2018. 
  15. "Pakistan Election 2018: List of Political Parties and their Symbols for General Election 2018" (in en). https://www.thenews.com.pk/latest/337014-pakistan-election-2018-list-of-political-parties-and-their-symbols-for-general-election-2018. 
  16. "PTI-G promises presidential system, judo training for women" (in en-US). https://www.geo.tv/latest/183365-gulalais-new-party-envisions-karate-training-for-women-parliamentary-democracy. 
  17. "PTI-Gulalai announces party tickets for transgender persons". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-24.
  18. "PTI-G awards tickets to four transgender persons | The Express Tribune" (in en-US). https://tribune.com.pk/story/1727867/1-pti-g-awards-tickets-four-transgender-persons/. 
  19. "Ayesha Gulalai loses four NA seats, secures only 3538 votes" (in en). The News. https://www.thenews.com.pk/latest/347026-ayesha-gulalai-loses-four-na-seats-secures-only-3538-votes. பார்த்த நாள்: 1 August 2018. 
  20. "Ayesha Gulalai gets only one vote at Nowshera polling station… but there’s a twist". ARYNEWS. https://arynews.tv/en/ayesha-gulalai-gets-one-vote-nowshera-with-twist/. பார்த்த நாள்: 1 August 2018. 
  21. "Ayesha Gulalai gives free advice to Bilawal to merge his 'small party' in PTI-G | Pakistan Today". archive.pakistantoday.com.pk. Archived from the original on 2021-06-13. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  22. "PTI-G secures 4,130 votes inJuly 25 polls". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிசா_குலாலை_வசீர்&oldid=3630400" இலிருந்து மீள்விக்கப்பட்டது