ஆம் ஆத்மி அரசாங்க விளம்பர சர்ச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆம் ஆத்மி அரசாங்க விளம்பர சர்ச்சை (AAP government advertisement controversy) எனப்படுவது ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் இலாபங்களுக்காக தில்லி அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு சர்ச்சையாகும்.

2015 தில்லி அரசின் நிதிநிலை அறிக்கை =[தொகு]

தில்லி மாநிலத்தின் 2015-16 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விளம்பரங்களுக்காக தில்லி அரசு 5.22 பில்லியன் டாலர் (73 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கியது. [1]

தகவல்தொடர்பு கலைக் குழாம் அறிக்கை[தொகு]

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 அன்று தில்லி சட்டமன்றத்தில் தகவல்தொடர்பு கலைக் குழாமின் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆம் ஆத்மி அரசாங்கம் 29 கோடி ரூபாய் அதாவது 4.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை கட்சியின் பொறுப்புக்கு அப்பாற்பட்டு தில்லிக்கு வெளியே செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சார விளம்பரங்களுக்காக செலவழித்துள்ளது என அவ்வறிக்கை குறிப்பிட்டது. மொத்த செலவினத் தொகையில் இது 86% ஆகும். [2][3] 24 கோடி டாலர் அதாவது 3.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள விளம்பர செலவுகள் நிதி உரிமையையும் உச்சநீதிமன்ற விதிமுறைகளையும் மீறியதாக இவ்வறிக்கை மேலும் தெரிவித்தது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "AAP govt spent Rs 29 crore in releasing ads outside Delhi: CAG report", Zee News, 14 March 2017
  2. "AAP govt spent Rs 28 crore on ads", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 11 March 2017
  3. "CAG pulls up Delhi govt over ads, finances", தி இந்து, 11 March 2017
  4. "Arvind Kejriwal fumes as CAG pulls up Delhi government over ads, finances", தி எகனாமிக் டைம்ஸ், 10 March 2017