உள்ளடக்கத்துக்குச் செல்

ஆம்ப்பிபோலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்ப்பிபோலிஸ்
Αμφίπολη
ஆம்பிபோலிஸ் தளங்கள்
ஆம்பிபோலிஸ் தளங்கள்
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: நடு மாசிடோனியா
மண்டல அலகு: செரஸ்
மேயர்: ஸ்டெர்கியோஸ் ஃப்ராஸ்டான்லிஸ்
(துவக்கம்: 2019)
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 9,182
 - பரப்பளவு: 411.7 km2 (159 sq mi)
 - அடர்த்தி: 22 /km2 (58 /sq mi)
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 2,615
 - பரப்பளவு: 152.1 km2 (59 sq mi)
 - அடர்த்தி: 17 /km2 (45 /sq mi)
சமூகம்
 - மக்கள்தொகை: 185
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
வாகன உரிமப் பட்டை: ΕΡ
வலைத்தளம்
dimos-amfipolis.gr
அம்ப்பிபோலிஸ் வரைபடம்

ஆம்ப்பிபோலிஸ் (Amphipolis, கிரேக்கம்: Αμφίπολη‎ ; பண்டைக் கிரேக்கம்Ἀμφίπολις ) [2] என்பது கிரேக்கத்தின் செரெஸ் பிராந்திய அலகில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். நகராட்சியின் தலைமையகம் ரோடோலிவோஸ் ஆகும் .[3] இது ஒரு முக்கியமான பண்டைய கிரேக்க நகரமாகும். பின்னர் ஒரு உரோமானிய நகரமாகவும் இருந்தது. அதன் எச்சங்களை பெருமளவில் இன்னும் காணலாம்.

ஆம்ப்பிபோலிஸ் முதலில் பண்டைய ஏதென்சின் குடியேற்றமாக இருந்தது. மேலும் இது கிமு 422 இல் எசுபார்தான்களுக்கும் ஏதெனியர்களுக்கும் இடையிலான போரின் தளமாக இருந்தது. கிமு 335 இல் ஆசியாவின் மீது படையெடுப்பதற்கு வழிவகுத்த போர்த் தொடர்களுக்கு பேரரசர் அலெக்சாந்தர் தயார் செய்த இடம் இதுவாகும்.[4] அலெக்சாந்தரின் மூன்று சிறந்த கடற்படைத் தளபதிகளான நியர்ச்சஸ், ஆண்ட்ரோஸ்தீனஸ், லாமெடான் ஆகியோர் ஆம்பிபோலிசில் வசித்து வந்தனர். அலெக்சாந்தரின் மரணத்திற்குப் பிறகு,[5] அவரது மனைவி ரோக்சானா மற்றும் அவர்களது மகன் நான்காம் அலெக்சாந்தர் கிமு 311 இல் சிறையில் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.[5][6]

நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சியில் முக்கியமான கட்டிடங்கள், பழங்கால சுவர்கள், கல்லறைகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. அக்கண்டுபிடிப்புகள் ஆம்பிபோலிசின் தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன . அருகிலுள்ள பரந்த கஸ்தா புதைமேட்டில், அண்மையில் பழமையான ஒரு மாசிடோனிய கல்லறை கண்டறியப்பட்டது. அருகிலுள்ள ஆம்பிபோலிஸ் நினைவுச்சின்னம் பார்வையாளர்களுக்கு பிரபலமான இடமாகும்.

இது எடோனிஸ் பிராந்தியத்தில் அமைந்திருந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "Amfípolis: Greece, name, administrative division, geographic coordinates and map". Geographical Names. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  3. "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.
  4. "Amphipolis", Ministry of Culture: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-214-126-3
  5. 5.0 5.1 Badian, Ernst. "Rhoxane ii Alexander's Wife". iranicaonline.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  6. Thirlwall, Connop. A History of Greece (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்ப்பிபோலிஸ்&oldid=3527024" இலிருந்து மீள்விக்கப்பட்டது