ஆம்பெர், இந்தியா

ஆள்கூறுகள்: 26°59′N 75°52′E / 26.983°N 75.867°E / 26.983; 75.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமெர்
ஆம்பர்
நகரம்
ஆள்கூறுகள்: 26°59′N 75°52′E / 26.983°N 75.867°E / 26.983; 75.867
நாடுஇந்தியா
மாநிலம்ராஜஸ்தான்
மாவட்டம்ஜெய்ப்பூர்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

ஆமெர் அல்லது ஆம்பர் (Amer or Amber) என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானிலுள்ள ஒரு நகரமாகும். இது இப்போது ஜெய்ப்பூர் மாநகராட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.

இங்கு மலைப் பாறை பள்ளத்தில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆமெரின் அழகென விக்டர் ஜாக்குமொன்ட் மற்றும் ரெஜினோல்ட் ஹெபர் உள்ளிட்ட பயணிகளின் பாராட்டை ஈர்த்துள்ளது. [1] நகரின் ஒருங்கிணைந்த ராஜ்புத்-முகலாய கட்டிடக்கலைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான ஆம்பர் கோட்டை ஜெய்ப்பூர் பகுதியில் சுற்றுலா தலங்களை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.

வரலாறு[தொகு]

நகரம், கோயில் மற்றும் கோட்டையின் காட்சி.
ஆம்பர் கோட்டை
ஆம்பர் கோட்டை
கோட்டையில் உள்ள அரண்மனைகளில் ஒன்றின் உள்ளே
1985இல் கோட்டை
பன்னா மீனா படிக் கிணறு

பொ.ச. 967 யில் மீனாஸின் சாந்தா குலத்தைச் சேர்ந்த ஆட்சியாளராக இருந்த ராஜா ஆலன் சிங் மீனா என்பவரால் இங்கு குடியேற்றம் நிறுவப்பட்டது. இன்றைய ஜெய்கர் கோட்டையின் தளத்தில் 1036ஆம் ஆண்டில் ஆமெர் தனது தலைநகரானபோது முதல் கட்டமைப்பை ராஜா ககில் தேவ் தொடங்கினார். சுமார் பொ.ச. 1037களில், இதனை ராஜபுத்திரர்களின் கச்வாஹா குலத்தினர் கைப்பற்றினர். [2]  ] ஆம்பர் கோட்டை என்று அழைக்கப்படும் தற்போதைய கட்டமைப்பின் பெரும்பகுதி உண்மையில் கி.பி 1590 முதல் 1614 வரை ஆட்சி செய்த மான் சிங் என்பவரால் கட்டப்பட்ட அரண்மனையாகும். இந்த அரண்மனையில் திவான்-இ-காஸ் போன்ற பல அற்புதமான கட்டிடங்கள் உள்ளன. மேலும் புகழ்பெற்ற போர்வீரனான முதலாம் ஜெய் சிங் (முதலாம் மான் சிங்கின் பேரன்) கட்டி விரிவாக வரையப்பட்ட கணேஷ் கம்பமும் இங்குள்ளது.

சுற்றுலா ஈர்ப்புகள்[தொகு]

நாகர்கர் உயிரியல் பூங்கா[தொகு]

இந்த பூங்கா இந்தியச் சிறுத்தை போன்ற அழிந்துவரும் உயிரினங்களின் தாயகமாகும். இந்த தாவரங்கள் காதியார்-கிர் உலர் இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழலின் பிரதிநிதியாகும் . [4]

ஊடகங்களில்[தொகு]

ஆமெர் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2011 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படமான தி பெஸ்ட் எக்ஸோடிக் மேரிகோல்ட் ஹோட்டல் படத்தின் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றன. [5] [6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பெர்,_இந்தியா&oldid=3542707" இருந்து மீள்விக்கப்பட்டது