ஆம்பீனிகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரம்பீனிகால்
தையாம்பீனிகால்

ஆம்பீனிகால்கள் (Amphenicols) என்பவை பீனைல்புரொபனாயிடு கட்டமைப்பில் உள்ள ஒரு வகையான எதிர் உயிரிகளாகும். பாக்டீரியாவின் 50S ரைபோசோம் துணையலகின் மீது ஊக்கிப்புரதம் பெப்டைடில் மாற்றுநொதியை தடைசெய்து இவை செயலாற்றுகின்றன..[1]

குளோரம்பீனிகால், தையாம்பீனிகால், அசிடாம்ஃபெனிகால் மற்றும் புளோரோஃபெனிகால் முதலியன ஆம்பீனிகால்களுக்கு உதாரணங்களாகும். இவற்றுள் முதலாவது சேர்மமாகக் கருதப்படுவது குளோரம்பீனிகால் ஆகும். முதன்முதலில் 1949 ஆம் ஆண்டு இயற்கைப் பொருளாக குளோரம்பீனிகால் கண்டறியப்பட்டது. ஆனால் தற்பொழுது அனைத்து ஆம்பீனிகால்களும் செயற்கையாக வேதியியல் தொகுப்பு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "APVMA: Florfenicol". Archived from the original on 2007-09-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பீனிகால்&oldid=3542705" இலிருந்து மீள்விக்கப்பட்டது