ஆம்பியாக்சசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆம்பியாக்சசு (Amphioxus) குத்தூசி எனப் பொருள்படும் லேன்செட் (Lancet) என்ற பெயரால் பொதுவாக அழைக்கப்படும் மீன் போன்ற தோற்றமுடைய கடல் வாழ் உயினமாகும்.[1][2]

1911 பிரிட்டானிகா - ஆம்பியாக்சசு லேன்செலாடசு

ஆம்பியாக்சசு பெயர் காரணம்[தொகு]

1774ஆம் ஆண்டில் முதன் முதலில் இதனைப் இங்கிலாந்து கடற்கரையில் கண்டெடுத்த பல்லாசு[3] என்பவர், இதனை ஓர் ஓடற்ற நத்தை எனக் கருதி இதற்கு லைமாக்சு லான்சியோலேட்டசு (Limax lanceolatus) என்று பெயரிட்டார். 1934ஆம் ஆண்டு கோசுடா என்பவர், இதன் செவுள்கள் தொண்டைப் பகுதியில் அமைந்திருந்ததால் இதற்கு பிராங்கியோஸ்டோமா என்று பெயரிட்டார்.[4] யாரால் லுயசநடட 1836 என்பவரே முதன் முதலாக இதற்கு ஆம்பியாக்சசு லான்சியோலேட்டசு (Amphioxus lanceolatus) என்று பெயரிட்டார்.[5][6]

அம்பியாக்சஸ் வகைப்பாடு[தொகு]

முதுகு நாணுள்ளவை எனும் தொகுதியின் கீழ் உள்ள, தலைமுதுகு நாணுடையன (Protochordata) அல்லது மண்டையோடற்றன (Acarina) எனும் தொகுதியின் கீழ் உள்ள, தலைமுதுகு நாணுடையன (Cephalochordata)

FMIB 46373 Lancelet

துணைத்தொகுதியில் ஆம்பியாக்சசு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உடலமைப்பு[தொகு]

ஆம்பியாக்சசு கடலில் ஆழங்குறைந்த மணற்பாங்கான பகுதிகளில் துளையிட்டு வாழ்கின்றது. இதன் சராசரி உடல் நீளம் 5 முதல் 8 செ.மீ. ஆகும். ஆனால் தென்சீனா, இந்தியா ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு சிற்றினம் 15 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. ஓளி ஊடுருவும் தன்மையுடைய இவற்றின் உடலின் இரு முனைகளும் கூராக உள்ளன. தனிப்பட்ட தலைப்பகுதியோ தாடைகளோ இல்லை. உடலானது (லான்சியோ லேட்டுகள்) மணலில் புதைந்து, வாய்ப்பகுதி மட்டும் மணலின் தெரியும்படி இருக்கும்.

நெப்ரிழயாக்கள், பழுப்புப் புனல்கள், சிறு நீரக பப்பில்லாக்கள் ஆகியன ஆம்பியாக்சசின் கழிவு நீக்க உறுப்புகளாகும். குழல் போன்ற அமைப்புடைய நெப்ரியாக்களில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஆண் பெண் ஆம்பியாக்சசு இடையே இன உறுப்புகளைத் தவிர வெளித்தோற்ற வேறுபாடு ஏதும் காணப்படுவது இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. Poss, Stuart G.; Boschung, Herbert T. (1996-01-01). "Lancelets (cephalochordata: Branchiostomattdae): How Many Species Are Valid?". Israel Journal of Zoology 42 (sup1): S13–S66. doi:10.1080/00212210.1996.10688872. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-2210. https://www.tandfonline.com/doi/abs/10.1080/00212210.1996.10688872. 
  3. [2]
  4. Garcia-Fernàndez, Jordi; Benito-Gutierrez, Èlia (June 2008). "It's a long way from amphioxus: descendants of the earliest chordate". BioEssays 31 (6): 665–675. doi:10.1002/bies.200800110. பப்மெட்:19408244. 
  5. Naturwissenschaftlicher Verein in Magdeburg.; Magdeburg, Naturwissenschaftlicher Verein in (1886). Jahresbericht und Abhandlungen des Naturwissenschaftlichen Vereins in Magdeburg. Vol. 1886. Magdeburg: The Verein.
  6. "Amphioxiformes". zoobank.org. பார்க்கப்பட்ட நாள் 2020-03-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பியாக்சசு&oldid=3711366" இலிருந்து மீள்விக்கப்பட்டது