ஆப்ரோசோரஸ்
ஆப்ரோசோரஸ் புதைப்படிவ காலம்:நடு ஜுராசிக் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | சோரோப்சிடா |
பெருவரிசை: | டயனோசோரியா |
வரிசை: | சோரிஸ்ச்சியா |
துணைவரிசை: | சோரோபோடோமோர்ஃபா |
உள்வரிசை: | சோரோபோடா |
தரப்படுத்தப்படாத: | மாக்குரோனேரியா |
பேரினம்: | ஆப்ரோசோரஸ் ஔயங், 1989 |
இனங்கள் | |
|
ஆப்ரோசோரஸ்' (உச்சரிப்பு /ˌæbrəˈsɔrəs/; 'delicate பல்லி') மாக்குரோனேரியா சோரோபொட் தொன்மா இனம். இது இன்றைய ஆசியாவின் நடு ஜூராசிக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தாஷன்பு கல் அகழிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல டயனோசோர் புதைபடிவங்களுள் ஒன்று. பல சோரோபோட்டுகளைப் போலவே ஆப்ரோசோரசும் நாலுகாலியும், தாவர உண்ணியும் ஆகும். ஒரு பொதுவான சோரோபோட்டு அளவுக்கு இது பெரியது அல்ல. இதன் நீளம் 9 மீட்டருக்கு (30 அடி) மேல் அதிகம் இருப்பதில்லை. இதன் தலை பெட்டிபோல் இருப்பதுடன், அதன் மேல் மூக்குத் துளைகளைக் கொண்ட எலும்புப் புடைப்புக் காணப்படும்.