ஆப்ரா (மரப்படகு)
Appearance

அப்ரா அல்லது ஆப்ரா (Abra) என்பது மரத்தாலான ஒரு பாரம்பரிய படகாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் உபநதி வழியே துபாய் முழுவதும் மக்களை அழைத்துச் செல்ல இந்த அப்ராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பர் துபாய் மாவட்ட்த்தின் சிந்தகா நீர் நிலையம் மற்றும் துபாயின் முக்கிய பகுதியான தேய்ரா பகுதிக்கு இடையில் உள்ள கடல் பரப்பினை கடக்க மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.[1] ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை அப்ராக்கள் புறப்பட்டு செல்கின்றன. கட்டணமாக 1 திர்காம் மட்டும் ஓட்டுநரிடம் செலுத்த வேண்டும்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Stephen Wilkins (2006). Dubai Creek. Troubador Publishing Ltd, 2006. ISBN 1-905237-47-2.