ஆப்பெல் வினை
ஆப்பெல் வினை Appel reaction | |
---|---|
பெயர் மூலம் | ரோல்ப் ஆப்பெல் |
வினையின் வகை | பதிலீட்டு வினை |
இனங்காட்டிகள் | |
RSC சுட்டெண் | RXNO:0000406 |
ஆப்பெல் வினை (Appel reaction) என்பது ஒர் ஆல்க்காலை ஆல்கைல் குளோரைடாக மாற்றும் கரிம வேதியியல் வினையாகும். இதற்காக இவ்வினையில் கார்பன் டெட்ராகுளோரைடும் டிரைபீனைல்பாசுபீனும் பயன்படுத்தப்படுகின்றன. புரோமின் அல்லது கார்பன் டெட்ராபுரோமைடை ஓர் ஆலைடு மூலமாகப் பயன்படுத்தினால் ஆல்கைல் புரோமைடு உற்பத்தியாகிறது. இதேபோல் கார்பன் டெட்ரா அயோடைடு, மெத்தில் அயோடைடு அல்லது அயோடினை ஆலைடு மூலமாகப் பயன்படுத்தினால் ஆல்கைல் அயோடைடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரோல்ப் ஆப்பெல் இவ்வினையைக் கண்டுபிடித்தார் என்பதால் வினைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது [1]. இவர் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அவ்வப்போது இவ்வினை குறித்து விவரிக்கப்பட்டும் உள்ளது [2]. மாண்ட்ரீயல் உடன்படிக்கை தந்த நெறிமுறையில் கார்பன் டெட்ராகுளோரைடு பயன்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வினையின் பயன்பாடு குறைவாகப் போய்விட்டது.
நச்சுத்தன்மை மிக்க ஆலசனேற்றும் முகவர்களை வினையில் பயன்படுத்துவதும், கரிமபாசுபரசு விளைபொருள்கள் வினையில் உருவாதலும் ஆப்பெல் வினையின் பின்னடைவுகளாகும் [3]. பாசுபரசு வினையாக்க முகவர்களை வினையூக்கி அளவுகளில் பயன்படுத்த இயலும் [4][5]. தொடர்புடைய ஆல்கைல் புரோமைடை இலித்தியம் புரோமைடை ஆதார மூலமாகப் பயன்படுத்தியும் தயாரிக்க இயலும்.
வினைவழிமுறை
[தொகு]பாசுபோனியம் உப்பு 3 உருவாதலுடன் ஆப்பெல் வினை தொடங்குகிறது. 4[6] உடன் இவை நெருக்கமான அயனி இணையாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே இது ஆல்பா நீக்கத்திற்கு உட்பட்டு டைகுளோரோகார்பீனைக் கொடுக்காது. ஆல்க்காலில் புரோட்டான் நீக்கம் நிகழ்ந்து குளோரோஃபார்ம் உருவாகி ஓர் ஆல்காக்சைடு 5 உருவாகிறது. இந்த ஆல்காக்சைடால் குளோரைடானது அணுக்கருகவர் இடப்பெயர்ச்சியால் ஓர் இடைநிலை வேதிப்பொருளாக 7 உருவாகிறது. இரண்டாம்நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆல்க்கால்களுடன் ஆலைடு SN2 செயல்முறையில் வினைபுரிந்து 8 ஆல்கைல் ஆலைடு மற்றும் டிரைபீனைல்பாசுபீன் ஆக்சைடு போன்றவை உருவாகின்றன. மூவிணைய ஆல்க்கால்கள் SN1 வினை வழிமுறையில் 6 மற்றும் 7 விளைபொருள்களைக் கொடுக்கின்றன.
இவ்வினையையும் இதைப்போன்ற பிற வினைகளையும் இயக்குவது புதியதாக உருவாகும் வலிமையான PO இரட்டைப் பிணைப்புகளேயாகும் [7]. இவ்வினை கிட்டத்தட்ட மிட்சுனோபு வினையை ஒத்ததாக உள்ளது. அவ்வினையில் ஒரு கரிமபாசுபீன் ஒர் ஆக்சைடு ஏற்பியாகவும், ஓர் அசோ சேர்மம் ஒரு ஐதரசன் ஏற்பி வினையாக்கியாகவும் மேலும் ஒரு அணுக்கரு கவரியும் இணைந்து பயன்படுத்தப்பட்டு ஆல்க்கால்களை எசுத்தர்களாக மாற்றுகின்றன. இதைப்போன்ற பிற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன [8]
.
கெரானியாலை கெரானைல் குளோரைடாக குளோரினேற்றம் செய்யும் வினையை ஆப்பெல் வினையை விளக்குவதற்கான வினையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் [9].
திருத்தங்கள்
[தொகு]கார்பாக்சிலிக் அமிலங்களில் ஆப்பெல் வினை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கார்பாக்சிலிக் அமிலங்களை ஆக்சசோலின்கள், ஆக்ச்சைன்கள் மற்றும் தயோசோலின்களாக மாற்ற இவ்வினை பயன்படுகிறது[10].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ Downie, I; Holmes, J; Lee, J (1966). "Preparation of Alkyl Chlorides Under Mild Conditions". Chemistry and Industry (22): 900. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-3068.
- ↑ Cadogan, J, ed. (1979). Organophosphorus Reagents in Organic Synthesis. London: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-154350-1.
- ↑ Denton, Ross; An, Jie; Adeniran, Beatrice; Blake, Alexander; Lewis, William; Poulton, Andrew (2011). "Catalytic Phosphorus(V)-Mediated Nucleophilic Substitution Reactions: Development of a Catalytic Appel Reaction". Journal of Organic Chemistry. doi:10.1021/jo201085r.
- ↑ van Kalkeren, Henri A.; Leenders, Stefan H. A. M.; Hommersom, C. (Rianne) A.; Rutjes, Floris P. J. T.; van Delft, Floris L. (2011). "In Situ Phosphine Oxide Reduction: A Catalytic Appel Reaction". Chemistry: A European Journal. doi:10.1002/chem.201101563.
- ↑ Wang, Zerong (2009). "22: Appel Reaction". Comprehensive organic name reactions and reagents. Hoboken, N.J.: John Wiley. pp. 95–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470638859.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-11.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ வார்ப்புரு:March6th
- ↑ Jose G. Calzada and John Hooz. "Geranyl chloride". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0634.; Collective Volume, vol. 6, p. 634
- ↑ Vorbrüggen, Helmut; Krolikiewicz, Konrad. "A simple synthesis of Δ2-oxazines, Δ2-oxazines, Δ2-thiazolines and 2-substituted benzoxazoles". Tetrahedron 49 (41): 9353–9372. doi:10.1016/0040-4020(93)80021-K. http://www.sciencedirect.com/science/article/pii/004040209380021K.
.