ஆப்பூர்
ஆப்பூர் Appur | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 12°48′11″N 79°58′36″E / 12.8031393°N 79.9765448°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,244 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 603204 |
ஆப்பூர் (Appur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து கிராமமாகும். சென்னையிலிருந்து சுமார் 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் மறைமலைநகர் ஆகும். மறைமலை நகர் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]ஆப்பூர் 488.72 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிராமத்தின் மக்கள் தொகை 1,244 ஆகும். இதில் 603 ஆண்களும் 641 பெண்களும் இருந்தனர். கிராமத்தில் சுமார் 301 வீடுகள் உள்ளன. 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தக் கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.[1]
ஆட்டோ நகர்
[தொகு]2018 ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள புதுப்பேட்டையில் உள்ள 383 ஆட்டோ சேவை கடை விற்பனையாளர்களை மறுவாழ்வு பெறுவதற்காக புதிய ஆட்டோ நகர் உருவாக்குவதற்காக கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Appur". Indian Village Directory. n.d. Retrieved 21 October 2018.
- ↑ Lopez, Aloysius Xavier (10 August 2018). "Pudupet auto service outlets to be demolished this week". The Hindu (Chennai: Kasturi & Sons): pp. 3. https://www.thehindu.com/news/cities/chennai/pudupet-auto-service-outlets-to-be-demolished-this-week/article24648057.ece. பார்த்த நாள்: 21 October 2018.