ஆப்பிரிக்கப் படைப்புழு
ஆப்பிரிக்கப் படைப்புழு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. exempta
|
இருசொற் பெயரீடு | |
Spodoptera exempta (Walker, 1856) | |
வேறு பெயர்கள் | |
|
ஆப்பிரிக்கப் படைப்புழு (African armyworm) என்பது பூச்சிகள் இனத்தில் நாக்டுஏ என்ற குடும்பத்தைச் சார்ந்ததாகும். இவ்வகைப் பூச்சிகள் தங்களின் உணவைத்தேடிச் செல்லும்போது லார்வாக்கள் பெரும்பாலும் ராணுவ அணிவகுப்பு போன்று செல்வதால் இப்பூச்சியை படைப்புழு எனப் பொதுவாக அழைக்கின்றனர்.[1] கம்பளிப் பூச்சிகளைப்போல் இவற்றில் மேல் முடிகள் அதிகம் காணப்படாமல் கருப்பும், பச்சையுமான கோடுகள் காணப்படுகின்றன. [2] கம்பளிப் பூச்சிகளைப்போல் தீங்குயிர் இனத்தைச் சார்ந்தாகும். இவை பயிர் வகைகளை ஒரே வாரத்தில் அழிக்கும் தன்மைகொண்டதாக உள்ளது. [3] இவ்வகைப்புழுக்கள் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டாலும் முதன் முதலில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தான் அடையாளம் காணப்பட்டது. இவை மேலும் வளர்ச்சி அடைந்து ஆப்பிரிக்காவின் பல நாடுகளுக்கும் பரவியது.
பரவல்
[தொகு]இவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாக்கண்டத்தின் பல நாடுகளுக்கும் பரவிக்காணப்படுகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் தான்சானியா, கென்யா, உகாண்டா, எத்தியோப்பியா, சோமாலியா, மலாவி, ஜிம்பாப்வே, ஜாம்பியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும், ஆசியாக் கண்டத்தில் இந்தியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. [4]
வாழ்விடம்
[தொகு]தாவரங்களில் மேல் முட்டையிட்டு இனவிருத்தி செய்து அதே தாவரத்தை உட்கொண்டு அதிகமான அளவு அழிவை ஏற்படுத்துகிறது. பொதுவாக இவை சதுப்புநிலம் சார்ந்த பகுதிகளில் அதிகமாக இனவிருத்தி செய்கிறது. [5]
கட்டுப்படுத்தும் முறை
[தொகு]இவ்வகையான படைப்புழுக்களை பூச்சிகொல்லி மருந்துகொண்டு கட்டுப்படுத்துவது கடினமாகும். ஏனெனில் இவை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது தனது மலத்தால் தன்னை மூடி பாதுகாப்பாக இருந்துகொள்கிறது. அதனால் இவை அதிகம் அழிவை ஏற்படுத்தும் மக்காச்சோளம் போன்ற உணவுப்பயிர்களுக்கும் முன்னால் நேப்பியர் புல் போன்ற புல் வகைகளை வளர்ப்பதால் இவற்றின் மேல் முதலில் முட்டையிட்டு அந்த முட்டைக்கு சத்துக்கள் கிடைக்காமல் இப்பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் ஊடுபயிர் முறை மூலம் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே பீன்சு போன்ற பயிர்களை வளர்ப்பதால் பின்னர் வளரும் மக்காச்சோளத்தை இப்பூச்சிகள் கவனிப்பதில்லை. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simmonds, M.S.J.; Blaney, W.M. (1986). "Effects of rearing density on development and feeding behaviour in larvae of Spodoptera exempta". Journal of Insect Physiology 32 (12): 1043–1053. doi:10.1016/0022-1910(86)90124-1.
- ↑ "10.1023/A:1003189628726". CrossRef Listing of Deleted DOIs. 2011. doi:10.1023/a:1003189628726.
- ↑ Odiyo, P.O. (1981). "Development of the first outbreaks of the African armyworm Spodoptera exempta (Walk.), between Kenya and Tanzania during the 'off-season' months of July to December". Insect Science and its Application 1 (4): 305–318. doi:10.1017/s1742758400000606.
- ↑ Kabissa, J. C. B (2008). "Amino Acid". In Capinera, John L. (ed.). Encyclopedia of Entomology (in ஆங்கிலம்). Springer Netherlands. p. 150. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4020-6359-6_187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402062421.
- ↑ Wilson, K; Gatehouse, A. G. (2017). "Seasonal and Geographical Variation in the Migratory Potential of Outbreak Populations of the African Armyworm Moth, Spodoptera exempta". Journal of Animal Ecology 62 (1): 169–181. doi:10.2307/5491.
- ↑ கட்டுப்படுத்தும் வழிமுறைகள் 16 மார்ச் 2019 இந்து தமிழ் திசை