ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி
பாஞ்சிர் கிளர்ச்சிக் குழு
ஆப்கானித்தான் போர்
 • பஞ்ச்சிர் கிளர்ச்சி

தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானித்தான் தேசியக் கொடி மற்றும் பஞ்ச்சிரின் வடக்குக் கூட்டணிக் கொடி [1][2][3]
இயங்கிய காலம் 16 ஆகஸ்டு 2021 – தற்போது வரை
தலைவர்கள் அகமது மசூத்
அம்ருல்லா சலே
பிஸ்மில்லா கான் மொகம்மதி
செயற்பாட்டுப்
பகுதி
ஆப்கானித்தானின், பாஞ்ச்சிர் மாகாணம், பக்லான் மாகாணம் மற்றும் பர்வான் மாகாணம்
எதிராளிகள் தாலிபான்/ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியினர் கைப்பற்றிய பகுதிகள், இளஞ்சிவப்பு நிறத்தில்

ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி அல்லது பஞ்ச்சிர் கிளர்ச்சிக் குழு (Panjshir resistance or National Resistance Front of Afghanistan),[2][4][5] இதனை இரண்டாம் கிளர்ச்சி என்றும் அழைப்பர்.[6] 15 ஆகஸ்டு 2021 அன்று தாலிபான்களால் காபூலின் வீழ்ச்சி அடைந்த பின்னர், தாலிபான்கள் அமைக்கும் அரசில் சம உரிமை கேட்கும் இக்குழுவினர், தாலிபான்களை எதிர்க்கும் வடக்குக் கூட்டணிப் படைகளை 17 ஆகஸ்டு 2021 முதல் சீரமைத்து வருகின்றனர். இக்கிளர்ச்சிக் குழுவின் தலைவராக அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத் உள்ளார். மேலும் ஆப்கானித்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே இக்குழவில் இணைந்துள்ளார்.[7]

காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னரும் தாலிபான்களால் இதுவரை கைப்பற்றப்பட முடியாத பாஞ்ச்சிர் மாகாணத்தின் பாஞ்ச்சிர் சமவெளியை, ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணிப் படைகளின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.[8][9]

தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானித்தானின் ஒரே படையான ஆப்கானித்தான் தேசிய எதிரிப்பு முன்னணிப் படையின் கொரில்லாத் தாக்குதல்களில் புகழ்பெற்றவர்கள். .[7][10][11][12]

17 ஆகஸ்டு 2021 அன்று தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானித்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே தன்னை ஆப்கானித்தானின் இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டதுடன், தாலிபான்களுக்கு எதிராக, பாஞ்ச்சிர் சமவெளியிலிருந்து போராடப் போவதாக அறிவித்தார்.[13] அம்ருல்லா சலேவின் அறிக்கையை, அகமது மசூத், ஆப்கானித்தானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா மொகம்மதி, ஆப்கானின் தஜிகிஸ்தான் தூதர் மொகம்மத் சாகீர் அக்பாரும் ஆதரித்தனர். [7][12][13]

பாக்லான் மாகாணம்[தொகு]

ஆப்கானித்தானின் பக்லாம் மாகாணத்தில் 20 ஆகஸ்டு 2021 அன்று அப்துல் அமீத் தாத்கர் தலைமையில் தாலிபான் எதிர்ப்படைகள் அமைக்கப்பட்டது.[14] இக்கிளர்ச்சிப் படையினர் தாலிபான்கள் வசமிருந்த அந்தராப் மாவட்டம், புலி இசாம் மாவட்டம் மற்றும் திக் சலே மாவட்டங்களை தங்கள் ஆளுகையின் கொண்டு வந்தனர்.[15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "'Northern Alliance' flag hoisted in Panjshir in first resistance against Taliban". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.{{cite web}}: CS1 maint: url-status (link)
 2. 2.0 2.1 "The mujahideen resistance to the Taliban begins now. But we need help". Washington Post. 18 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.{{cite web}}: CS1 maint: url-status (link)
 3. Roggio, Bill (18 August 2021). "After fall of Kabul, resistance to Taliban emerges in Panjshir". Long War Journal. https://www.longwarjournal.org/archives/2021/08/after-fall-of-kabul-resistance-to-taliban-emerges-in-panjshir.php. 
 4. "Afghan leader of Taliban resistance urges West to "supply us without delay"". Newsweek. 2021-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
 5. "National Resistance Front Of Afghanistan | The Irish Times". www.irishtimes.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
 6. "Analysis | Northern Afghanistan once kept out the Taliban. Why has it fallen so quickly this time?". Washington Post. https://www.washingtonpost.com/politics/2021/07/28/northern-afghanistan-once-kept-out-taliban-why-has-it-fallen-so-quickly-this-time/. "Taliban promises not to move to Panshir; Ahmad Massoud says he is ready to give his blood for his land | Tajikistan News ASIA-Plus". asiaplustj.info. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19."Preparing for a Post-Departure Afghanistan: Changing political dynamics in the wake of the US troop withdrawal announcement". Afghanistan Analysts Network. 2021-06-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19."He promised an "organized resistance" to Taliban rule. Now he wants U.S. help to lead the fight". www.cbsnews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19."Northern Afghanistan once kept out the Taliban. Why has it fallen so quickly this time?". Washington Post.{{cite web}}: CS1 maint: url-status (link)
 7. 7.0 7.1 7.2 "'Panjshir stands strong': Afghanistan's last holdout against the Taliban". The Guardian. 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
 8. "An anti-Taliban front forming in Panjshir? Ex top spy Saleh, son of 'Lion of Panjshir' meet at citadel". The Week. August 17, 2021 இம் மூலத்தில் இருந்து August 17, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210817065524/https://www.theweek.in/news/world/2021/08/17/an-anti-taliban-front-forming-in-panjshir-ex-top-spy-saleh-son-of-lion-of-panjshir-meet-at-citadel.html. 
 9. Brick Murtazashvili, Jennifer (28 July 2021). "Northern Afghanistan once kept out the Taliban. Why has it fallen so quickly this time?". The Washington Post. Archived from the original on 16 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
 10. "An anti-Taliban front forming in Panjshir? Ex top spy Saleh, son of 'Lion of Panjshir' meet at citadel". The Week. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
 11. "The Panjshir Valley: what is the main bastion of resistance against the Taliban advance in Afghanistan". Market Research Telecast. 17 August 2021.
 12. 12.0 12.1 Kramer, Andrew E. (2021-08-18). "Leaders in Afghanistan's Panjshir Valley defy the Taliban and demand an inclusive government.". The New York Times. https://www.nytimes.com/2021/08/18/world/asia/taliban-panjshir-valley.html. 
 13. 13.0 13.1 "Panjshir flies flag of resistance again; Amrullah says he is President of Afghanistan". Tribune India. August 17, 2021. https://www.tribuneindia.com/news/world/panjshir-flies-flag-of-resistance-again-amrullah-says-he-is-president-of-afghanistan-298553. 
 14. "Anti-Taliban militia take hold of Baghlan province". The Independent. August 20, 2021. https://www.independent.co.uk/asia/south-asia/afghanistan-news-live-taliban-biden-updates-b1905856.html. 
 15. "Anti-Taliban Resistance Recaptures Multiple Areas as Afghans Fight Back". Newsweek. August 20, 2021. https://www.newsweek.com/anti-taliban-resistance-recaptures-multiple-areas-afghans-fight-back-1621437. 

வெளி இணைப்புகள்[தொகு]