ஆப்கானித்தான் வெள்ளம், 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தான் வெள்ளம், 2022
2022 Afghanistan floods
நாள்மே 5, 2022 (2022-05-05) – முதல்
அமைவிடம்ஆப்கானித்தான்
இறப்புகள்659+
  • மே – 400
  • சூன் – 19
  • சூலை – 40
  • ஆகத்து – 200+

ஆப்கானித்தான் வெள்ளம், 2022 (2022 Afghanistan floods) என்பது மே 2022-ல், ஆப்கானித்தானின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினைக் குறிக்கிறது. இந்த வெள்ளப்பாதிப்பு காரணமாக 400 பேர் கொல்லப்பட்டனர்.[1] தொடர்ச்சியாக சூன் மாதத்தில் 19 பேரும் சூலையில் 40 பேரும் உயிரிழந்துள்ளனர்.[2] ஆகத்து மாதத்தில் வெள்ளம் தொடர்ந்தது. இதன் காரணமாக மேலும் 200 பேர் கொல்லப்பட்டனர்.[3][2] குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் ஏற்பட்ட தெற்காசிய வெள்ளம் ஆப்கானித்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

தாக்கம்[தொகு]

ஆப்கானித்தான் வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த பயிர் விளைச்சல் காரணமாகக் கடுமையான உணவு பற்றாக்குறையில் உள்ளது. தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ஆகத்து மாதம் அமெரிக்கத் தலைமையிலான படைகள் பின்வாங்கியது. பல தசாப்தங்களாக நடந்த போரினால் ஏற்பட்ட வறுமை மற்றும் வெளிநாட்டு உதவிகளின் வீழ்ச்சி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் முடக்கம் ஆகியவற்றால் நிலைமை மிக மோசமாகியுள்ளது.

மே[தொகு]

மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர்.[1][4][5] குறிப்பாக பட்கிஸ், பர்யாப் மற்றும் பாக்லான் மாகாணங்களில் மழை மற்றும் வெள்ளம் கடுமையாக இருந்தது. ஆப்கானித்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தலைவர் ஹசிபுல்லா ஷெகானி கூறுகையில், 500 வீடுகள் இடிந்துள்ளன என்றும் மேலும் 2,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 300 கால்நடைகள் வெள்ளத்தினால் கொல்லப்பட்டன. சுமார் 3,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் உதவுவதாகவும், அதிகாரிகள் மற்ற பன்னாட்டு அமைப்புகளை உதவிக்கு அணுகுவார்கள் என்றும் கூறினார்.

ஆகத்து[தொகு]

ஆகத்து மாதம் தொடர்ந்த வெள்ளத்தினால் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.[3] வெள்ளத்தின் காரணமாக 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Recent floods in Afghanistan caused by incessant rain kill 400 people". business-standard.com. 23 June 2022. Archived from the original on 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  2. 2.0 2.1 2.2 "Heavy rains set off flash floods, killing 182 in Afghanistan". Arab News.
  3. 3.0 3.1 "Flash floods kill 18, injure 40 in Afghanistan's Kunar province". Xinhua News Agency. 29 August 2022.
  4. "Heavy rain and floods in Afghanistan kill 22, destroy hundreds of homes". Reuters. 5 May 2022 இம் மூலத்தில் இருந்து 21 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220821152057/https://www.reuters.com/business/environment/heavy-rain-floods-afghanistan-kill-22-destroy-hundreds-homes-2022-05-05/. 
  5. "Afghanistan – Flash Floods Cause Fatalities and Severe Damage – FloodList". Archived from the original on 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 7 May 2022.