ஆப்கானித்தான் படையெடுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்கானித்தான் ஒரு மலைகள் நிறைந்த நிலம்சூழ் நாடு ஆகும். இது நடு மற்றும் தெற்காசியாவிற்கு நடுவில் அமைந்துள்ளது.[1][2] மௌரியப் பேரரசு, அலெக்சாந்தரின் பண்டைய மாசிடோனிய பேரரசு, ஸீன் கலீபகம், செங்கிஸ் கானின் தலைமையிலான மங்கோலியப் பேரரசு, தைமூரின் தைமூரியப் பேரரசு, முகலாயப் பேரரசு, பல பாரசீகப் பேரரசுகள், பிரித்தானியப் பேரரசு, சோவியத் ஒன்றியம், மற்றும் கடைசியாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஆகிய நாடுகள் ஆப்கானித்தான் மீது படையெடுத்துள்ளன.  

வரலாற்று ரீதியாக ஆப்கானித்தானை வெல்வதென்பது மேற்கில் இருந்து கைபர் கணவாய் வழியாக இந்தியா மீது படையெடுப்பதிலும் ஒரு முக்கியப் பங்காற்றியது.

வரலாறு[தொகு]

மங்கோலியப் பேரரசு[தொகு]

குவாரசமியா மீதான மங்கோலியப் படையெடுப்பின் போது, இப்பகுதியைச் செங்கிஸ் கான் வடகிழக்கு திசையிலிருந்து தாக்கினர். பெரும் மங்கோலியப் பேரரசை உருவாக்கியதன் பல படையெடுப்புகளில் ஒன்றாக இது அமைந்தது. காபுல், காந்தாரம், ஜலாலாபாத் மற்றும் பிற நகரங்களில் இவரது இராணுவங்கள் பல்லாயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்தன. செங்கிஸ்கான் மங்கோலியாவிற்குத் திரும்பிய பிறகு, எல்மந்து பகுதியில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. இக்கிளர்ச்சியைச் செங்கிஸ் கானின் மகனும் அடுத்த பெரிய கானுமாகிய ஒக்தாயி கான் இரக்கமின்றி ஒடுக்கினார். 1222ஆம் ஆண்டு, காசுனி மற்றும் எல்மாந்திலிருந்த அனைத்து ஆண்களும் கொல்லப்பட்டனர். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு விற்கப்பட்டனர். இதற்குப் பிறகு, தூரத்திலிருந்த தென்கிழக்குப் பகுதியைத் தவிர ஆப்கானித்தானின் மற்ற அனைத்துப் பகுதிகளும் மங்கோலிய ஆட்சியின் கீழ் ஈல்கானரசு அல்லது சகதாயி கானரசின் பகுதிகளாக இருந்தன.

மங்கோலிய மற்றும் துருக்கியப் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் எனக் கசாரா மக்கள் கருதப்படுகின்றனர். எனினும் இது விவாதத்திற்குரியதாக உள்ளது. ஏனெனில், கசாரா மக்களைப் பற்றிய முதல் குறிப்பானது 16ஆம் நூற்றாண்டில் பாபுரால் கொடுக்கப்பட்டது.[3] தற்போதைய ஆப்கானித்தானின் சியாவைப் பினபற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் கசாரா மக்களாக இருக்கின்றனர். மேலும் ஆப்கானித்தானின் பெரும்பாலான பகுதிகளுக்கு மங்கோலிய மற்றும் துருக்கியத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. காந்தகார் மாகாணத்தின் மயவந்து மாவட்டத்தில் உள்ள பாந்தி தைமூர் என்ற இடம். இதன் பொருள், "தைமூரின் வளாகம்" என்பதாகும். 21ஆம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளின் படையெடுப்புக் காலம் முழுவதும் தாலிபான்களிடமிருந்து எப்போதுமே கைப்பற்றப்படாத ஒரே மாவட்டம் இது மட்டும் தான். வர்தகு மாகாணத்தின் ஜாகடு மாவட்டம், சகதாயி கானரசுக்கு மதிப்பளிப்பதற்காக இவ்வாறு பெயரிடப்பட்டது. ஷா வாலி கோத்து மாவட்டத்தில் உள்ள வெச் படு கிராமம், இது படு கானுக்குப் பிறகு பெயரிடப்பட்டது.[4]

சூலை 24, 2004 அன்று அமெரிக்க வீரர்கள் ஒரு படைக்கரட்டுந்தை சி.எச்.-47 சினூக் உலங்கூர்தி மூலம் தொங்கவிட்டுத் தூக்கிச் செல்ல பாக்ராமில் தயார் செய்கின்றனர்.

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Composition of macro geographical (continental) regions, geographical sub-regions, and selected economic and other groupings". UNdata. 26 April 2011. Archived from the original on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 July 2011.
  2. "Afghanistan". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 25 February 2010. பார்க்கப்பட்ட நாள் 17 March 2010.
  3. "HAZĀRA: ii. HISTORY". Alessandro Monsutti (Online ed.). United States: Encyclopædia Iranica. December 15, 2003. Retrieved 9 August 2012.
  4. Tareekh e Afghanistan - Usman Barakzai