உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானில் போர் (2001-2021)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானித்தானில் போர் (2001-2021)
நாள் 7 அக்டோபர் 2001 – 30 ஆகஸ்டு 2021
இடம் ஆப்கானித்தான்
முடிவு 31ஆகஸ்டு 2021 அன்று போர் முடிவுற்றது. ஆப்கானில் தாலிபான்கள் ஆப்கானித்தான் இடைக்கால அரசை நிறுவினர்.
பிரிவினர்
ஆப்கானை ஆளும் தாலிபான் படைகள் & அல் காயிதா போராளிகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்

ஆப்கானித்தான் நாட்டில் 2001 முதல் 2021 வரை நீடித்த ஒரு ஆயுத மோதலாகும். அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு காரணமாக ஆப்கானித்தானை ஆளும் முகம்மது உமர் தலைமையிலான தாலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல் காயிதா போராளிகளை ஒழிப்பதற்கு விதமாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆபரேஷன் எண்டியூரிங் ஃப்ரீடம் என்ற பெயரில் ஆப்கானித்தானில் படையெடுப்புடன் தொடங்கியது.[1] நேட்டோ படைளுக்கு வடக்குக் கூட்டணிப் படைகள் உதவியது. காபூல் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தாலிபான் படைகளை நேட்டோ படைகள் வெளியேற்றியது.

இப்போரில் தாலிபான்களின் தலைவரான முகமது உமரின் ஆட்சி கவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஹமித் கர்சாய் தலைமையில் ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு நிறுவப்பட்டது.[2]

கிராமபுறங்களில் முல்லா உமர் தலைமையிலான தலிபான்கள் மறுசீரமைக்கப்பட்டதுடன், நேட்டோ படைகள் மற்றும் ஆளும் அரசுக்கு எதிராக நாடெங்கும் கிளர்ச்சிகளைத் தொடங்கினர். ஆப்கானித்தானின் பெரும்பகுதிகளை தாலிபான் படையினர் கைப்பற்றினர். 2021ஆம் ஆண்டில் தோகா உடன்படிக்கையின்படி, அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானித்தானை விட்டு வெளியேறியது. தலிபான்கள் ஆப்கானித்தான் இடைக்கால அரசை நிறுவினர். இப்போர் அமெரிக்க இராணுவ வரலாற்றில் மிக நீண்ட போராக இருந்தது. அமெரிக்கா நடத்திய வியட்நாம் போரை விட இப்போர் ஆறு மாதங்கள் கூடுதலாகும்.

இறப்புகள் & அகதிகள்

[தொகு]

ஒட்டுமொத்தமாக இந்தப் போரில் 46,319 பொதுமக்கள் உட்பட 176,000–212,000+ பேர் கொல்லப்பட்டனர். கூடுதலாக, வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா பகுதியில் நடந்த தொடர்புடைய போரில் 66,650 பேர் கொல்லப்பட்டனர். [3]2001 படையெடுப்பிற்குப் பிறகு 5.7 மில்லியனுக்கும் அதிகமான முன்னாள் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியிருந்தாலும்[4], 2021 இல் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில், 2.6 மில்லியன் ஆப்கானியர்கள் அகதிகளாகவே இருந்தனர்[5].அதே நேரத்தில் மேலும் 4 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தனர்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Xu, Ruike (5 January 2017). Alliance Persistence within the Anglo-American Special Relationship: The Post-Cold War Era. Springer. ISBN 978-3-319-49619-1.
  2. "Securing, Stabilizing, and Reconstructing Afghanistan: Key Issues for Congressional Oversight". www.govinfo.gov. Retrieved 2022-10-31.
  3. "Human and Budgetary Costs to Date of the U.S. War in Afghanistan, 2001–2022 | Figures | Costs of War". The Costs of War. Archived from the original on 6 September 2021. Retrieved 2021-09-01.
  4. Afghan Refugees, Costs of War, "Afghan Refugees | Costs of War". Archived from the original on 10 March 2013. Retrieved 30 May 2013., 2012
  5. "In numbers: Life in Afghanistan after America leaves". BBC News. 13 July 2021. Archived from the original on 23 August 2021. Retrieved 2021-07-15.
  6. *"US War in Afghanistan: 1999–2021". Council on Foreign Relations. 2021. Archived from the original on 27 February 2019.
  7. David P. Auerswald; Stephen M. Saideman (5 January 2014). NATO in Afghanistan: Fighting Together, Fighting Alone. Princeton University Press. pp. 87–88. ISBN 978-1-4008-4867-6. Archived from the original on 25 January 2016. Retrieved 31 October 2015.