ஆப்கானித்தானின் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்கானித்தான் ஒரு பன்மொழி நாடாகும். தாரி மொழி மற்றும் பாஷ்டோ மொழி ஆகிய இரண்டும் ஆப்கானித்தானில் அதிகம் பேசப்படும் மற்றும் அலுவல் மொழிகளாகும். தாரி மொழி ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழி வடிவின் ஒரு மாறுபாடு ஆகும். ஆப்கானிஸ்தான் அரசால் 1964 ஆம் ஆண்டில் அந்நாட்டில் பேசப்படும் பாரசீக மொழிக்கு தாரி மொழி என பெயரிடப்பட்டது.[1] தாரி மொழியும் பாஷ்டோ மொழியும் இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஈரானிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

உஸ்பெக், டர்க்மேன், பாலோச்சி, பாஷாயி மற்றும் நூரிஸ்தானி மொழிகள் ஆப்கானித்தானில் பேசப்படும் சிறுப்பான்மை மொழிகள்.மொழியாலர் ஹரால்ட் ஹார்மன் ஆப்கானிஸ்தானில் 40 க்கும் மேற்பட்ட சிறு மொழிகள் தோன்றியதாக நம்புகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.