ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகள் உட்பட உலகின் ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் ஒருங்குறியிலான உள்ளீடுகளை எழுத்துப் பிழைதிருத்தம் தானாகவே செய்தல் (Auto Correct) வசதிகளை உள்ளடக்கியது. எனினும் ஒத்தசொல் வசதி இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் ஹிந்தி் ஆகிய இருமொழிகளில் மாத்திரம் தான் உள்ளது. இதை நிறுவுவதற்கு ஆபிஸ் 2003 பதிப்பு நிறுவப் பட்டிருத்தல் வேண்டும். ஒருங்குறியில் தமிழை ஆபிஸ் பதிப்புகளில் உள்ளீடு செய்வதானால் எ-கலப்பை அல்லது வேறேதேனும் மென்பொருளைப் பாவிக்கலாம். மைக்ரோசாப்ட் தானாகவே பயன்படுத்தும் மொழியைக் கண்டுபிடித்துத் திருத்தங்களை மேற்கொள்ளும். முதலாவது படத்தில் தமிழ் ஒருங்குறியில் அமைக்கப் பட்ட சோதனைக் கோப்பொன்றில் எழுத்துப் பிழைகள் சிலவற்றைச் சரியாகவும் வேறுசிலவற்றைப் பிழையாகவும் சிகப்புக் கோடிடுவதைக் காணலாம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]