உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபிரகாம் செல்மனோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபிரகாம் செல்மனோவ்
பிறப்பு2 மே 1913 (in Julian calendar)
Hadiach
இறப்பு2 பெப்பிரவரி 1987 (அகவை 73)
படித்த இடங்கள்MSU Faculty of Mechanics and Mathematics
பணிஇயற்பியலறிஞர்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
நிறுவனங்கள்
  • MSU Faculty of Mechanics and Mathematics
ஆய்வு நெறியாளர்வசீலி பெசென்கோவ்

ஆபிரகாம் செல்மனோவ் (Abraham Zelmanov) (மே 15, 1913 - பிப்ரவரி 2, 1987), பொதுச் சார்பியல் கோட்பாட்டிலும் அண்டவியலிலும் ஆய்வு மேற்கொண்ட பெயபெற்ற அறிவியலாளர் ஆவார். இவர் 1944 இல் பொதுச் சார்பியல் கோட்பாட்டில் நோக்கத்தகு இய்ற்பியல் கணியங்களை (அளபுருக்களை) அளக்க உதவும் முழுமையான கணிதவியல் முறையை முதன்முதலில் உருவாக்கினார். இது காலஞ்சார் மாறிலிகள் கோட்பாடு எனப்படுகிறது. இவர் 1940 களில் இந்தக் கணிதவியல் கருவியைப் பயன்படுத்தி, ஒருபடித்தல்லாத திசை சார்ந்து வேறுபடக் கூடிய புடவியின்கோட்பாட்டு அடிப்படைகளை உருவாக்கினார். இதன்வழி, இவர் அண்டத்தின் சிறப்புவகைப் படிமங்களை கொணர்ந்தார். அதாவது புடவிப் படிமலர்ச்சியின் பல்வேறு இயல்வாய்ப்புகளைக் கொணர்ந்தார். இது அய்ன்சுட்டின் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் ஒருபடித்தற்ர திசை சார்ந்து மாறக்கூடிய புடவியை கோட்பாட்டியலாகக் கொணர வழிவகுத்தது.

வாழ்க்கை[தொகு]

இவர் உருசியப் பேரரசின்பொல்தாவா குபெர்னியாவில்1913 மே 15 இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சூடோவிய, சமயஞ்சார் அறிவியலாளர் ஆவாரிவர் தோரா, கபாலா ஏற்பாட்டுப் பிரிவுகலுக்கு உரைகண்டவர். செல்மனோவ் 1937 இல் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் எந்திரக் கணிதவியல் துறையில் தன் கல்வியை நிறைவு செய்தார். இவர் 1937 க்குப் பிறகு மாஸ்கோவில் உள்ள சுடெர்ன்பர்கு வானியல் நிறுவனத்திலாய்வு மானவராகச் சேர்ந்தார். இங்கு இவர் தன் ஆய்வுரையை 1944 இல் தந்தார். இவர் 1953 இல் யூதருக்கு எதிரான ஜோசப் சுடாலினின் பரப்புரை இயக்கத்தில் பொது மாந்தநேயம் பெசியதற்காகச் சிறைபிடிக்கப்பட்டார். என்றாலும் சில ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் சுடாலின் இறந்ததுமே, இவர் விடுதலை செய்யப்பட்டார். பல பத்தாண்டுகள் இவர் பக்கவாத்த்தால் பீடிக்கப்பட்ட தன் பெற்றோருடன் ஒரே அறையை மற்ற அக்கம்பக்கத்தவர்களோடு பகிர்ந்து வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் தன் பெற்றோரை அக்கறையோடு பேணிப் பாதுகாத்தார். அவர்கள் தம் இயல்பான முதுமாஇ வரை அமைதியாக வாழ்ந்தனர். இவருக்கு 1970 களில் தான் சொந்த நகராட்சி அடுக்ககத்தில் ஓர் உறைவிடம் கிடைத்தது. இவர் மும்முறை மணம் செய்துகொண்டார். இவர் சுடெர்ன்பர்கு வானியல் நிறுவனத்தில் கல்விப்பணியாளராக வாழ்நாள் முழுவதும் தன் இறப்பு வரை இருந்தார். இவர் 1987 பிப்ரவரி 2 இல் இறந்தார்.

வாழ்வும் அறிவியல்பணியும்[தொகு]

இவர் ஒல்லியானவர். இயல்பை விட உயரங்கட்டையான குள்ளர். ஆனால் நுட்பமான மனிதர். பார்வைக்கு இவரது வாழ்வும் சிந்தனையும் எளியதாகவும் ஆர்வம் ஊட்டாததாகவும் தோன்றும். ஆனால், அவருடன் நெருங்கிப் பழகி, நண்பரோடு அவர் ஆற்றும் அறிவியல் விவாதங்களில் கலந்துகொண்டால், அவரைப் பற்றிய மாற்றுக் கண்ணோட்டம் கிடைக்கும். அவை பேரறிஞரின் மாந்தநேயரின் மரபுசாராத முறையில் வெளியிடப்படும் அறிவார்ந்த கூற்றுகளாக அமையும். சிலவேலைகளில் இவரோடு உரையாற்றும்போது ஓர் இருபதாம் நூற்றாண்டு மனிதரிடம் பேசுவது போலவே தோன்றாது. மாறாக, ஒரு செவ்வியல் கிரேக்க அல்லது இடைக்கால மெய்யியல் அறிஞருடன் பழகுவதுபோல் தோன்றும். இவ்விவாதங்களின் கருப்பொருள் என்றென்றைக்குமானவை; அவை புடவி உள்ளமைப்பு, புடவியில் மாந்தனின் இருப்பிடம், காலம்,வெளி ஆகியவற்றின் தன்மை போல அமையும்.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

இது முழுமையான பட்டியல் அன்று.
  • Zelmanov AL. Chronometric Invariants And Co-Moving Coordinates In The General Relativity Theory . Doklady Akademii Nauk SSSR 107 (6): 815-818 1956 . Times Cited: 81 .
  • Zelmanov AL. Orthometric Form Of Monadic Formalism And Its Relation To Chronometric And Kinemetric Invariants . Doklady Akademii Nauk SSSR 227 (1): 78-81 1976 . Times Cited: 28 .
  • Zelmanov AL. Kinemetric Invariants And Their Relation To Chronometric Invariants Of Einsteins Theory Of Gravity . Doklady Akademii Nauk SSSR 209 (4): 822-825 1973 . Times Cited: 20 .
  • Zelmanov AL. On The Question As To The Infinite Extension Of Space In General Relativity . Doklady Akademii Nauk SSSR 124 (5): 1030-1033 1959 . Times Cited: 16 .
  • Zelmanov AL. The Problem Of The Deformation Of The Co-Moving Space In Einsteins Theory Of Gravitation . Doklady Akademii Nauk SSSR 135 (6): 1367-1370 1960 . Times Cited: 6 .
  • Zelmanov AL. Relativity Of Spatial And Temporal Finiteness And Infiniteness Of World Filled With Matter . Astronomicheskii Zhurnal 54 (6): 1168-1181 1977 . Times Cited: 5 .
  • Zelmanov AL, Kharbedia Li. Necessary Conditions Of Relativity Of Finiteness And Infinity Of Non-Empty Space . Astronomicheskii Zhurnal 55 (1): 186-187 1978 . Times Cited: 4 .
  • Zelmanov AL. Primenenie Soputstvuyushchikh Koordinat V Nerelyativistskoi Mekhanike . Doklady Akademii Nauk SSSR 61 (6): 993-996 1948 . Times Cited: 1 .
  • Zelmanov AL, Khabibov Zr. Chronometrically Invariant Variations In The Einstein Theory Of Gravitation . Doklady Akademii Nauk SSSR 268 (6): 1378-1380 1983 . Times Cited: 0.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரகாம்_செல்மனோவ்&oldid=2734613" இலிருந்து மீள்விக்கப்பட்டது