உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபிசு மக்மூத் சிரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர் ஆபிசு மக்மூத் சிரானி – அரபு, பாரசீக மற்றும் உருது இலக்கியங்களில் புகழ்பெற்ற அறிஞர். (ஆதாரம்: அரபு-பாரசீக ஆய்வு நிறுவனம், டோங்க், ராஜஸ்தான்)

ஆபிசு மக்மூத் சிரானி (Hafiz Mehmood Khan Shirani) (5 அக்டோபர் 1880 – 15 பிப்ரவரி 1946) பிரித்தானிய இந்தியாவில் வாழ்ந்த ஓர் ஆராய்ச்சியாளரும் கவிஞரும் ஆவார்.[1][2][3]

இவர் புகழ்பெற்ற உருதுக் கவிஞர் அக்தர் சிரானியின் (1905 – 1948) தந்தை ஆவார்.[3]

வாழ்க்கை மற்றும் பணி

[தொகு]

மக்மூத் கான் சிரானி, பிரித்தானிய இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள தோங்க் நகரில் 1880 அக்டோபர் 5 அன்று பிறந்தார்.[2][3] சிறு வயதிலேயே [[திருக்குர்ஆனை மனப்பாடம் செய்த இவர், பின்னர் பாரசீக மொழியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். அதன்பிறகு, 1898-இல் இராசத்தானின் ஜோத்பூரில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.[3] பின்னர் இலாகூருக்குச் சென்று, 1899-இல் 'முன்ஷி ஆலம்' பட்டத்தையும், அதைத் தொடர்ந்து 1901-இல் 'முன்ஷி பாசில்' பட்டத்தையும் பெற்றார்.[3]

இவரது மகனான முகம்மது தாவூத் கான் — பிற்காலத்தில் அக்தர் சிரானி (1905-1948) என்ற பெயரில் புகழ்பெற்ற உருதுக் கவிஞராகத் திகழ்ந்தவர்.[3]

மக்மூத் சிரானி 1921-இல் இலாகூரில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் உருது கற்பிக்கத் தொடங்கினார்.[2][4][3]

1928-இல், இவர் இலாகூரில் உள்ள ஓரியண்டல் கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கினார். 1940-இல் இவர் தனது ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஒரு ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்த இவரது 'பஞ்சாபில் உருது' எனும் கோட்பாடும், பின்னர் வெளியிடப்பட்ட அது தொடர்பான நூலும் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன.[2][1]

மறைவு

[தொகு]

ஆபிசு மக்மூத் சிரானி தனது சொந்த ஊரான தோங்கில் 1946 பிப்ரவரி 15 அன்று காலமானார்.[2][3] வேலை செய்கிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Mian Noor Hassan. "Punjab Mein Urdu by Hafiz Mehmood Khan Shirani - a literary criticism (in Urdu language)". Internet Archive website.
  2. 1 2 3 4 5 Rauf Parekh (8 February 2010). "Was Urdu born in Punjab?". Dawn newspaper இம் மூலத்தில் இருந்து 21 October 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251021234002/https://www.dawn.com/news/968795/was-urdu-born-in-punjab.
  3. 1 2 3 4 5 6 7 8 Butt, Muhammad Usman (27 April 2021). "Urdu Tahqeeq Ka Muallam e Awwal (First Teacher of Research on Urdu language - Hafiz Mehmood Khan Shirani) (original article in Urdu language)". Urdupoint.com website. Archived from the original on 29 August 2023. Retrieved 21 October 2025.
  4. ↑ By Mohan Lal (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot via Google Books. Sahitya Akademi. p. 4020. ISBN 9788126012213.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிசு_மக்மூத்_சிரானி&oldid=4624539" இலிருந்து மீள்விக்கப்பட்டது