ஆன் மூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆன் மூர் (பிறப்பு 1940) ஓர் அமெரிக்க செவிலியர் ஆவார். இவர் சுனக்லி (Snugli), வீகோ (weego) எனும் குழந்தையைக் கொண்டுசெல்லும் முதுகுப் பைகளைக் கண்டுபிடித்தார.[1]

மூர் ஒரு குழந்தையைப் பேணும் செவிலியரவார். இவர் செருமனியிலும் மொராக்கோவிலும் மாந்தநேயப் பணிகளில் ஈடுபட்டவர்.இவர் அமைதிப்படைத் தன்னார்வலரும் ஆவார். இவர் 1960களில் டோகோவில் தானும் அமைதிப்படைத் தன்னார்வலரான தன் கணவர் மைக்குடன் பணிபுரிந்தார் .[1][2]

இந்த இணையருக்கு முதல் மகள் பிறந்ததும் அமெரிக்காவுக்குத் திரும்பும்போது மேற்கு ஆப்பிரிக்க முறைப்படிஒரு நீண்ட துப்பட்டாவை ஏணையாக முதுகில் தொங்கவிட்டு அதில் குழந்தையை கொண்டுவர முயன்றுள்ளார்.இம்முரையில் குழந்தை நழுவ வாய்ப்புள்ளதால் மூரும் அவரது தாயாரான அகனேசு லூசில்லெ ஔகெர்மனும் இன்றைய சுனக்லிக்கு முன்னோடியான முதுகுச் சேணத்தை உருவாக்கியுள்ளனர்.[1] The Snugli was patented in 1969.[3][4]

குழந்தை ஏணையின் மாற்றங்களுக்கும் பின்னர் பல உரிமங்கள் வழங்கப்பட்டன.[5][6] இவருக்கு 1988இலும் 1989இலும் உயிரக உருளையைக் கொண்டுசெல்லும் முதுகேந்தியான காற்றுத் தூக்கிக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டன.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Heather Bruce Satrom. "Lemelson Center Invention Features: Protecting Precious Cargo: Ann Moore". Lemelson Center for the Study of Invention and Innovation - Smithsonian Institution's National Museum of American History. பார்த்த நாள் 2009-02-24.
  2. "The Mom Who Invented The Snugli". CBS News (2001-03-06). பார்த்த நாள் 2009-02-24.
  3. "U.S. Patent 3,481,517".
  4. "Lemelson Inventor of the Week". Lemelson-MIT Program. பார்த்த நாள் 2009-02-25.
  5. "U.S. Patent 4,434,920".
  6. "U.S. Patent D277,811".
  7. "U.S. Patent 4,739,913".
  8. "U.S. Patent D305,078".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_மூர்&oldid=2707689" இருந்து மீள்விக்கப்பட்டது