உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன் போ ஜேயுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் போ ஜேயுன்
பிறப்புமே 16, 1988 (1988-05-16) (அகவை 36)
புசான்
தென் கொரியா
கல்விடாக்குய்ங் பல்கலைக்கழகம் – வடிவழகர் திணைக்களம்
பணிநடிகர்
வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை
முகவர்எப் என் என்டர்டெயின்மென்டு

ஆன் போ ஜேயுன் (ஆங்கில மொழி: Ahn Bo-hyun, 안보현) (பிறப்பு: மே 16, 1988) என்பவர் ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் தனது திரைப்பயணத்தை முதலில் ஒரு விளம்பர வடிவழகராக அறிமுகமானார்.[1][2] அதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு முதல் 'கோல்டன் கிராஸ்', இட்டாவோன் கிளாஸ் (2020) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் 2016 ஆம் ஆண்டு 'ஹியா' என்ற திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் 16 மே 1988 ஆம் ஆண்டு, தென் கொரியாவில் உள்ள புசானில் பிறந்தார். தனது உயர்கல்வியை பூசன் ஸ்போர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றார். இவர் அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் ஆகத்து 3, 2023 அன்று, பிளாக்பிங் குழுவின் கே-பாப் பாடகிமற்றும் நடிகை ஜிசூவுடன் டேட்டிங் செய்வதை இவரின் நிறுவனம் உறுதிப்படுத்தியது.[4] பின்னர் உறவு சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு இவர்களின் நேர இன்மை மற்றும் கால அட்டவணையின் காரணமாக இவர்கள் பிரிந்து சென்றனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Oh, Ara (22 March 2016). "[bnt pictorial] Actor Ahn Bo-Hyun, 'As One Says'". BNTNews. Archived from the original on 2020-07-22. பார்க்கப்பட்ட நாள் 2016-03-27.
  2. Khelil, Nawael (14 August 2014). "Model Ahn Bo-Hyun Will Protect The Secret Hotel". BNTNews. Archived from the original on 2020-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-03-27.
  3. Sunio, Patti. "Itaewon Class villain Ahn Bo-hyun – get to know the Korean drama and YouTube star who is best friends with Sehun of K-pop boy group Exo". SCMP. Archived from the original on September 6, 2021. பார்க்கப்பட்ட நாள் May 16, 2020.
  4. Soh, Joanne (August 3, 2023). "Blackpink's Jisoo and K-actor Ahn Bo-hyun are dating". The Straits Times (Singapore) இம் மூலத்தில் இருந்து August 3, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230803174847/https://www.straitstimes.com/life/entertainment/blackpink-s-jisoo-and-k-actor-ahn-bo-hyun-are-dating. 
  5. Hicap, Jonathan (October 24, 2023). "Report: BLACKPINK's Jisoo, actor Ahn Bo-hyun break up". Manila Bulletin இம் மூலத்தில் இருந்து October 24, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231024132145/https://mb.com.ph/2023/10/24/report-blackpink-s-jisoo-actor-ahn-bo-hyun-break-up. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_போ_ஜேயுன்&oldid=3865822" இலிருந்து மீள்விக்கப்பட்டது