ஆன்வர்டு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்வர்டு
இயக்கம்டான் ஸ்கான்லான்
தயாரிப்புகோரி ரே
திரைக்கதை
  • டான் ஸ்கான்லான்
  • ஜேசன் ஹெட்லி
  • கீத் புனின்
இசை
  • மைக்கேல் டன்னா[1]
  • ஜெஃப் டன்னா[1]
நடிப்பு
ஒளிப்பதிவு
  • ஷரோன் கலஹன்
  • ஆடம் ஹபீப்
படத்தொகுப்புகேத்தரின் ஆப்பிள்[2]
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 21, 2020 (2020-02-21)(பெர்லின்)
மார்ச்சு 6, 2020 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்103 மில்லியன்[3]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$175–200 மில்லியன்[4]
மொத்த வருவாய்$103.2 மில்லியன்[5]

ஆன்வர்டு (Onward) என்பது 2020 ஆண்டைய அமெரிக்க அமெரிக்க கணினி-அனிமேஷன் செய்யப்பட்ட நகர்ப்புற கற்பனைத் திரைப்படம் ஆகும். இப்படமானது வால்ட் டிஸ்னி பிக்சர்சுக்காக பிக்ஸர் அனிமேஷன் ஸ்டுடியோசால் தயாரிக்கப்பட்டது. ஸ்கான்லான், ஜேசன் ஹெட்லி மற்றும் கீத் புனின் ஆகியோர் திரைக்கதை எழுத, டான் ஸ்கான்லான் இயக்க, படத்தை கோரி ரே தயாரித்துள்ளார். மேலும் டாம் ஹாலண்ட், கிறிஸ் பிராட், ஜூலியா லூயி-டிரெயிஃபஸ் மற்றும் ஒக்டேவியா சுபென்சர் ஆகியோர் படத்தின் பாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இதன் கதையானது இறந்துவிட்ட தந்தையை மாயசக்தி மூலமாக மீட்க முயலும் இரு சிறுவர்களின் சாகசத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. [6]

இந்த படம் 2020, பெப்ரவரி 21, அன்று 70 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் பிறகு 2020 மார்ச் 6 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. பொதுவாக படமானது விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, உலகளவில் 103 மில்லியனை டாலரை ஈட்டியுள்ளது. மற்ற பிக்சார் படங்களுடன் ஒப்பிடும்போது படத்தின் வசூலானது 2019–20 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக குறைவாகவே இருந்தது. மேலும் மார்ச் மாதத்தில் வெளியான பல படங்களைப் போலவே, இது திரையரங்க வெளியீட்டிற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் கிடைத்தது.

கதைச்சுருக்கம்[தொகு]

எல்எஃ எனப்படும் ஜெர்மானிய தொன்மக் கதையின் பின்னணியில், அதிசயங்கள், மந்திர தந்திரங்கள் போன்றவற்றுடன் நவீன காலத்தின் அனைத்து சாத்தியங்களையும் கொண்டதாக இப்படம் விரிநுத்ள்ளது.

பதின்ம வயதை எட்டும்போது மகன்களுக்கு தரலாம் என்று ஒரு பரிசை எடுத்து வைத்துள்ளார். ஆனால் அதற்கு முன்னதாவே அவர் இறந்துவிடுகிறார். மகன்கள் பதின்ம வயதை எட்டும்போது தந்தையின் பரிசை தாயார் அவர்களுக்கு தருகிறார். அந்த பரிசானது ஒரு மந்திரக் கோலாகும். அதன் மூலமாக இறந்துவிட்ட தந்தையை 24 மணிநேரம் உயிர்பிக்க இயலும் என்பதை சகோதரர்கள் அறிகிறார்கள். அதனைப் பயன்படுத்தி தந்தையை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதனால் கொஞ்சகொஞ்சமாக தந்தையின் உடல் உருவாகிறது. அப்போது ஏற்படும் குளறுபடியால் இடுப்புவரையில் உருவானதுடன் தந்தையின் உடல் உருவாக்கம் மேல்பாதி அற்று நின்றுவிடுகிறது. அந்த மேல்பாதியை உருவாக்க மகன்கள் ஒரு சாகச பயணமத்தை மேற்கொள்ளவேண்டி வருகிறது. தங்கள் முயற்சியில் மகன்கள் வென்றார்களா? தந்தையை மீண்டும் பெற்றார்களா என்பதே கதை.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Mychael & Jeff Danna to Score Pixar's 'Onward' – Film Music Reporter". Archived from the original on April 17, 2019. பார்க்கப்பட்ட நாள் April 17, 2019.
  2. "Catherine Apple". collider. Archived from the original on December 7, 2019. பார்க்கப்பட்ட நாள் December 8, 2019.
  3. "Programme - Onward". Berlinale (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.
  4. Rebecca Rubin (March 8, 2020). "Box Office: 'Onward' Debuts to $28 Million Overseas Amid Coronavirus Outbreak". Variety. Archived from the original on March 8, 2020. பார்க்கப்பட்ட நாள் March 18, 2020.
  5. "Onward (2020)". Box Office Mojo. Archived from the original on February 29, 2020. பார்க்கப்பட்ட நாள் March 20, 2020.
  6. Variety staff (July 14, 2017). "D23: Pixar Announces Untitled Quest Movie Set in 'Suburban Fantasy World'". Variety (Penske Media Corporation). https://variety.com/2017/film/news/pixar-disney-untitled-suburban-fantasy-world-unicorns-d23-1202496455/. பார்த்த நாள்: July 21, 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்வர்டு_(திரைப்படம்)&oldid=3052632" இலிருந்து மீள்விக்கப்பட்டது