ஆன்னி செவல் யங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்னி செவல் யங்
Anne Sewell Young
ஆன்னி செவல் யங்
பிறப்புஜனவரி 2, 1871
புளூமிங்டன், விசுகான்சின்
இறப்புஆகத்து 15, 1961(1961-08-15) (அகவை 90)
கிளேர்மாண்ட், கலிபோர்னியா
துறைவானியல்
பணியிடங்கள்விட்மன் கல்லூரி
மவுண்ட் கோலியோக் கல்லூரி
கல்விசார்ள்டன் கல்லூரி
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஆய்வேடுஉடுக்கணக் கொத்துகள் h அல்லது x பெர்சேய்க்கான உரூதர்போர்டு ஒளிப்படங்கள்

ஆன்னி செவல் யங் (Anne Sewell Young) (ஜனவரி 2, 1871 – ஆகத்து 15, 1961) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மவுண்ட் கோல்யோக் கல்லூரியில் 37 ஆண்டுகளுக்கு வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

வாழ்க்கை[தொகு]

இவர் 1871 ஜனவரி 2 இல் விசுகான்சினைச் சேர்ந்த புளூமிங்டனில் மரைத்திரு ஆல்பர்ட் ஆடம்சு யங்குக்கும் ஆன்னி செவலுக்கும் பிறந்தார்.[1]

இவர் தன் சட்ட இளவல் பட்டத்தை 1892 இல் மின்னெசோட்டவைச் சேர்ந்த சார்ள்டன் கல்லூரியில் பெற்றார்.[2] பின்னர் இவர் வாழ்சிங்டனில் உள்ள வால்லா வால்லாவுக்குச் சென்று, அங்கே விட்மன் கல்லூரியில் மூன்று ஆண்டுகளுக்குக் கணிதவியலைப் பயிற்றுவித்தார். பிறகு சார்ள்டனுக்கு வருமுன் 1897 இல் தன் மூதறிவியல் பட்டத்தைப் பெற்றார்.[2][3] இவர் 1906 இல் தன் முனைவர் பட்டத்தைக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவரது ஆய்வு முந்தைய ஒளிப்படங்களின் அளவீடுகளை மதிப்பிட்டுபெர்சியூசு விண்குழுவில் முன்பு கருதியதை விட இருமடங்கு விண்மீன்கள் உள்லமையைத் தீர்மானித்தார்.[4]

யங் 1898 இல் மவுண்ட் ஓலியோக் கல்லூரியில் தன் பணியைத் தொடங்கினார்.[2] இவர் ஜான் பேசன் வில்லிசுட்டன் வான்காணக இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். இங்கு இவர் சூரியக் கரும்புள்ளிகளைக் கண்கானிக்கும் நோக்கீட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்தார். இவர் அந்த வான்காணகத்தில் மவுண்ட் ஓலியோக் கல்லூரி மாணவருக்குப் பல நிகழ்ச்சிகளை ஏற்ப்படு செய்தார். இவர் 1925 இல் 1925 ஜனவரி 24 இல் நிகழ்ந்த சூரிய ஒளிமறைப்புக்கு மாணவர் குழுவை ஆயத்தப் படுத்தி நடுவண் கன்னெச்டிகட்டுக்குச் சுற்றுலாவாகத் தொடர்வண்டியில் அழைத்துச் சென்றுவந்தார்.[4] இவர் 1904இல் "அடிலைடே" தவறாகச் சிறுகோளாக இனங்கண்ட வான்பொருள் (A904 EB) உண்மையில் வால்வெள்ளி 31பி/சுவாசுமன்–வாக்மன் ஆகும் என கண்டுபிடித்தார்.[5]

யங் மாறும் விண்மீன்களின் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே இவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணக இயக்குநராகிய எட்வார்டு சார்லசு பிக்கஎரிங்குடன் மாறும் விண்மீன்களைப் பற்றிக் கடித்த்த் தொடர்பு வைத்திருந்தார்.[4] இவர் அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தை நிறுவிய எட்டு நிறுவன உறுப்பினரில் ஒருவராவார். இவர் அக்கழகத்துக்காக 6,500 மாறும் விண்மீன் நோக்கீடுகளைச் செய்துள்ளார்.[6] She was elected the organiza tion's President in 1923.[4]

யங் 1936 இல் ஓய்வு பெற்றதும் தன் தங்கையுடன் கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்ட்டுக்கு சென்றார்.இவர் அங்கு 1961 ஆகத்து 15 இல் இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hogg, Helen Sawyer. "Obituary Notices: Anne Sewell Young". Quarterly Journal of the Royal Astronomical Society 3 (4): 355–357. Bibcode: 1962QJRAS...3..355.. http://adsabs.harvard.edu/full/1962QJRAS...3..355.. 
  2. 2.0 2.1 2.2 "In the Path of the Sun's Eclipse". St. Louis Post-Dispatch: p. 11. May 26, 1900. https://www.newspapers.com/clip/15009061/anne_sewell_young_18711961/. பார்த்த நாள்: November 10, 2017.  open access publication - free to read
  3. Creese, Mary R.S. (1998). Ladies in the Laboratory? American and British Women in Science, 1800-1900: A Survey of Their Contributions to Research. Lanham, Md.: Scarecrow Press. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-585-27684-7.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Wessling, Susan (2002). "Young, Anne Sewell (1871–1961)". In Commire, Anne (ed.). Women in World History: A Biographical Encyclopedia. Waterford, Connecticut: Yorkin Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7876-4074-3. Archived from the original on 2016-02-20. பார்க்கப்பட்ட நாள் 2018-01-05. {{cite book}}: Unknown parameter |subscription= ignored (help)
  5. "Long 'Lost' Planet Found Masquerading as Comet". Oakland Tribune: p. 31. June 21, 1929. https://www.newspapers.com/clip/14987519/anne_sewell_young_18711961/. பார்த்த நாள்: November 9, 2017.  open access publication - free to read
  6. Bracher, Katherine (2012). "Anne S. Young: Professor and Variable Star Observer Extraordinaire". Journal of the American Association of Variable Star Observers 40: 24–30. Bibcode: 2012JAVSO..40...24B. https://www.aavso.org/media/jaavso/2771.pdf. பார்த்த நாள்: 2018-08-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்னி_செவல்_யங்&oldid=3363508" இலிருந்து மீள்விக்கப்பட்டது