ஆன்சும் சோபி ஸ்கல்லும்

ஆன்ஸ் மற்றும் சோஃபி ஸ்கல் (Hans and Sophie Scholl), பெரும்பாலும் ஜெர்மன் மொழியில் die Geschwister Scholl என்று குறிப்பிடப்படுவர் ( ஷோல் உடன்பிறப்புகள் ) என்பவர்கள் நாட்சி ஜெர்மனியில் நாசிசத்தை அறப் போராட்ட முறையில் எதிர்த்த சகோதர சகோதரிகளாவர். இவர்கள் குறிப்பாக போருக்கும், அடால்ஃப் இட்லரின் சர்வாதிகாரத்திற்கும் எதிராக துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதில் மியூனிக் நகரில் இருந்து தீவிரமாக செயல்பட்ட மாணவர் குழுவான வெள்ளை ரோசா அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். போருக்குப் பிந்தைய ஜெர்மனியில், ஆன்சும் சோஃபி ஸ்கோலும் சர்வாதிகார நாசிச ஆட்சிக்கு எதிரான ஜெர்மன் எதிர்ப்பின் அடையாளங்களாக அங்கீகரிக்கப்படுள்ளனர்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஸ்கல்லின் உடன்பிறந்தோராக இங்கே (1917–1998), ஹான்ஸ் (1918–1943), எலிசபெத் (1920–2020), சோபி (1921–1943), வெர்னர் (1922–1944) தில்டே (1925–1926) ஆகிய ஆறு பேர் இருந்தனர். இவர்களது குடும்பம் வூர்ட்டம்பேர்க்கில், ஃபோர்ச்டன்பெர்க் (1930 வரை), லுட்விக்ஸ்பர்க் (1930–1932), உல்ம் (1932–) நகரங்களில் வசித்து வந்தது.[1]
1943 பெப்ரவரி 18 அன்று, உடன்பிறப்புகளில் இருவரான ஆன்சும், சோஃபியும், மியூனிக்கின் லுட்விக் மாக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை பாதுகாவலர் ஜேக்கப் சமிட் பிடித்து, மறைநிலை காவல்துறையான கெஷ்டாபோ வுக்குத் தகவல் கொடுத்தார். [2] 1943 பெப்ரவரி 22 அன்று, நீதிபதி ரோலண்ட் ஃப்ரீஸ்லர் தலைமையிலான மக்கள் நீதிமன்றத்தால் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே நாளில் ஸ்டேடல்ஹெய்ம் சிறையில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கபட்டது. இவர்களின் கல்லறை அருகிலுள்ள பெர்லாச்சர் ஃபோர்ஸ்ட் கல்லறைத் தோட்டத்தில் உள்ளது (கல்லறை எண் 73-1-18/19). [3]
மரணத்திற்குப் பிந்தைய அங்கீகாரம்
[தொகு]
கெஷ்விஸ்டர்-ஸ்கோல்-பிரீஸ் என்பது போர்சென்வெரின் டெஸ் டாய்சென் புச்சாண்டல்ஸ் என்னும் பதிப்புச் சங்கத்தால் முனிச் நகரத்தில் பவேரியா மாநில சங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு இலக்கியப் பரிசு ஆகும். அது 1980 ஆம் ஆண்டு முதல், "அறிவுசார் சுதந்திரம் மற்றும் குடிமைச் சுதந்திரம், தார்மீக சுதந்திரம், அழகியல் துணிச்சல் போன்றவற்றை ஆதரிக்கிறது. மேலும் பொறுப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு இது ஒரு முக்கிய உந்துதலாக உள்ளது" (" das von geistiger Unabhängigkeit und geeignet ist, bürgerliche Freiheit, moralischen, intellektuellen und ästhetischen Mut zu fördern und dem gegenwärtigen Verantwortungsbewusstsein wichtige Impulse zu geben ").
முனிச்சில் உள்ள லுட்விக் மாக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் ஷோல் உடன்பிறப்புகளுக்கு பல நினைவு இடங்கள் உள்ளன. போருக்குப் பிந்தைய காலத்தில் நிறுவப்பட்ட புதிய அறிவியலுக்கான கெஷ்விஸ்டர்-ஷால்- கல்வி நிறுவனம், என 1968 சனவரி 30 அன்று இவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்திற்கு முன்னால் உள்ள பகுதி கெஷ்விஸ்டர்-ஷோல்-பிளாட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வெள்ளை ரோசாவின் கடைசி துண்டுப்பிரசுரம் தரையில் பதிப்பிக்கபட்டுள்ளது. 1997 முதல், ஸ்கல் உடன்பிறப்புகள் மற்றும் வெள்ளை ரோசா அமைப்பின் பிற உறுப்பினர்களுக்கான நினைவுச்சின்னம் பிரதான கட்டிடத்தின் முகப்பில் காணப்படுகிறது. மேலும் 2005 முதல், சோஃபி ஸ்கல்லின் வெண்கல மார்பளவு சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளன. கெஷ்விஸ்டர்-ஸ்கோல்-பிரீஸ் விருது ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தின் கலையரங்கில் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் பெயரை "கெஷ்விஸ்டர் ஷோல் பல்கலைக்கழகம்" என்று பெயர் மாற்றவேண்டும் என்ற மாணவர் அமைப்பின் முன்மொழிவு பல்கலைக்கழகத் தலைமையால் நிராகரிக்கப்பட்டது.
ஜெர்மனியின் பல நகரங்கள் தெருக்கள், வளாகங்கள், பள்ளிகள் போன்றவற்றிற்கு ஷோல் உடன்பிறப்புகளின் பெயரை வைக்கபட்டுள்ளன.
இருப்பினும், குற்றவியல் நீதி நிர்வாகத்தில் அநீதியான நாஜி தீர்ப்புகளை ஒழிப்பதற்காக 1998 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட பின்னரே, ஹான்ஸ் ஷோல் மற்றும் வெள்ளை ரோசின் பிற உறுப்பினர்களுக்கு எதிரான தண்டனைகள் ஜெர்மனியில் செல்லாது என்று மாறியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Scholl, Inge (2011). The White Rose : Munich, 1942-1943. Wesleyan University Press. ISBN 978-0-8195-7272-1. கணினி நூலகம் 767498250.
- ↑ Stern, Fritz; Hanser, Richard (1979). "A Noble Treason: The Revolt of the Munich Students against Hitler". Foreign Affairs 58 (2): 426. doi:10.2307/20040455. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-7120. http://dx.doi.org/10.2307/20040455.
- ↑ Scholl, Hans and Sophie. doi:10.1163/1877-5888_rpp_sim_025337. http://dx.doi.org/10.1163/1877-5888_rpp_sim_025337. பார்த்த நாள்: 2021-12-08.