ஆனைவாரி ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆனைவாரி ஆனந்தன்(Anaivari Anandhan) தமிழ் கவிஞர் எழுத்தாளர் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பாளர் ஆவார்.

வாழ்க்கை குறிப்பு

பெயர் : இரா.ஆனந்தன்

பெற்றோர் : அ. இராமானுஜம், அஞ்சலையம்மாள். பிறப்பு : IO.02.1950 பிறந்த ஊர் தென்னாற்காடு மாவட்டம் (இன்று கடலூர்) சிதம்பரம் வட்டம் .(இன்று புவனகிரி) ஆனைவாரி எனும் சிற்றூர். சாதி : வன்னியர் குல சத்திரியர் (படையாட்சி, மழவராயர் )

கவிஞர், எழுத்தாளர் ,பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் என பன்முக திறன் கொண்டவர்.

கல்வி:

தமிழ் , ஆங்கில மொழிகளில் முதுகலை பட்டங்கள், இளநிலை அறிவியல் பட்டம், ஓமியோபதி மருத்துவம்,

சித்த மருத்துவ வரலாற்று ஆய்வில் முனைவர் பட்டம் (P. H. D)

எழுதியுள்ள நூல்கள்

 • ஆனைவாரியின் கவிதைக் கதைகள்
 • நியாயம் கேட்கிறேன்
 • முத்து மழைத் தூறல்
 • மழலைப் பாடல்கள்
 • ஆனைவாரியார் கவிதைகள்
 • எண் பெரும் பாட்டு (நெடும் பாடல்கள் )
 • கவிதைத் தேரில்
 • வீரமும் காதலும்
 • அபலையின் கடிதம்
 • விண்ணிலே ஒரு வீடு
 • உள்ளமும் உறவும்
 • அவள் யார்
 • இன்றும் நாளையும்
 • வாழ்வும் வழக்கும்

புதினம் ஒரு கவிஞன் முனிவனாகிறான்

இலக்கிய ஆய்வு 1. தமிழர் நெஞ்சில் பாவேந்தர் 2. பாவேந்தரின் இசையமுது 3. ஆங்கிலக் கவிஞர்களும் பாரதியும் 4. கண்ணதாசனின் தைப்பாவை 5 அண்ணாவின் நிலையும் நினைப்பும் அறிவியல் படைப்புகள்

 • விண்ணிலே ஒரு வீடு
 • வியப்பூட்டும் விந்தைகள்
 • அது ஏன்? இது ஏன்?
 • காற்றாலை
 • அறிவோம் தெளிவோம்
 • அறிவியலின் வளர்ச்சியிலே ,
 • அஞ்சல் தந்தி தொலைபேசி
 • நான் தான் சக்தி
 • மனிதன் வந்த வழி
 • அறிவியல் கொடுக்கும் அதிசய மகசூல்
 • சூழல் தூய்மையே சுகமான வாழ்வு
 • சித்த மருத்துவ வரலாறு
 • மனப்பானவ

தொகுப்பு சிறந்த எழுத்தாளர், படைப்பாளரன இவர் கவிக்குயில் என்ற மாத இதழை நடத்தி வருகிறர்.சென்னை மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களில் ஆனைவாரியாரின் இலக்கிய உரைகள் 1981 முதல் 20-க்கும் மேற்பட்டவை ஒலி பரப்பாகி உள்ளன.

விருதுகள்: 2017 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது 05-04-2018 அன்று முதலமைச்சரால் வழங்கப்பட்டது.

|

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைவாரி_ஆனந்தன்&oldid=2716595" இருந்து மீள்விக்கப்பட்டது