உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனைக் கொன்றான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"அனகோண்டா" என்னும் சொல் முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய யுனெக்டஸ் முரினஸ் வகையைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது.

அனகோண்டாக்கள் (Anaconda) தென் அமெரிக்க மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும். இப்பெயர் சில பாம்புக் குடும்பங்களைக் உள்ளடக்கியதாக இருப்பினும், முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய "யுனெக்டஸ் முரினஸ் என்பதனைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது. வலையுரு மலைப் பாம்பையும் சேர்த்து இது உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாகும். ஆராய்ச்சிக் கூடங்களில் பிடித்தோ கொன்றோ அளக்கப்பட்ட அனகோண்டாக்களில் 30 அடி நீளம் வரை கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன.[சான்று தேவை]

கூடுதலாக நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், அவர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை பொதுவாக மீன்கள், ஆற்றுக்கோழிகள், அரிதாக ஆற்றுக்கு அருகே வரும் ஆடுகள், குதிரைகளையே இரையாக உண்ணுகின்றன.

அனகோண்டாக்களால் தாக்கப்படுவதைக் கருவாகக் கொண்டு பல படக் கதைகள், திரைப்படங்கள் மற்றும் சாகசக் கதைகள் அமேசான் காட்டுப் பின்னணியில் புனையப்பட்டுள்ளன.

அனகோண்டா என்ற பெயர்:

  • யுனெக்டஸ் பேரினத்தைச் சேர்ந்த, தென் அமெரிக்க பெரிய நீர்வாழ் பாம்புகளைக் குறிக்கும்.
  • தென் அமெரிக்க தொன்மக் கதைகளில் குறிப்பிட்டுள்ள ராட்சச அனகோண்டாக்களையும் குறிக்கும்.
  • தன் இரையை "நொறுக்கி" உட்கொள்ளும் எந்த ஒரு பெரிய பாம்புமே இப்பெயரால் அழைக்கப்படுகிறது.[1]

பெயர் வரலாறு

[தொகு]

தேசிய புவியியல் இதழானது அனகோண்டா தமிழ் சொல்லான ஆனைக்கொன்ற என்பதில் இருந்து வந்தது என்கிறது.[2]

மெரியம் வெப்ஸ்டர் இணைய அகராதியின்படி [3], இலங்கையில் காணப்படும் சிறிய பச்சை நிறமான சாட்டைப் பாம்பு வகையை குறிப்பிட பயன்படுத்தும் சிங்கள வார்த்தையான ஹெனகாண்டாயா [4][5][6] என்ற சொல்லே மருவி அனகோண்டா எனப்படுகிறது. ஹெனகாண்டாயா என்பது இலங்கையில் இப்போது அழிந்து விட்ட நொறுக்குவான் வகையைச் சேர்ந்த பாம்பினத்தைக் குறிக்க பயன்படுத்தும் சொல் என மற்ற சில இலக்கியங்களில்[7][8] குறிப்பிடப்பட்டுள்ளது. ரிச்சர்ட் பாயில் (ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் இலங்கை ஆங்கில ஆலோசகர்) தன்னுடைய 'சிந்துபாத் இன் செரெண்டிப்' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்:[9]

ஆங்கிலத்தில் அனகோண்டாவுக்கான முதல் குறிப்பு ஆர். எட்வின் (இது புனைப்பெயராய் இருக்கலாம்) ஸ்காட்ஸ் இதழுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் வெளிவந்தது. ஒல்லாந்தர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கையில் புலியை விழுங்கிய ஒரு பாம்பை தான் கண்டது குறித்து அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார். “பாம்பின் ஒரு பிரம்மாண்டமான வகையான அனகோண்டா. கிழக்கு இந்தியப் பகுதியில் இலங்கைத் தீவில் பல்லாண்டு காலம் வசித்து வந்த ஒரு ஆங்கிலேய சீமானின் கடிதத்தில் இருந்து தெரியவருவது” என்கிற தலைப்பில் 1768 ஆம் ஆண்டு பதிப்பு ஒன்றில் இது வெளியானது.[10] ஆயினும், இது பாம்புகளைக் குறித்து வெகு குறைவான அறிவியல் அறிவே இருந்த ஒரு காலத்தில், கொழும்பின் வெளிப்புறப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கற்பனை கலந்த சம்பவமே ஆகும்.

— ரிச்சர்டு பாயில்

குறிப்புதவிகள்

[தொகு]
  1. ஆக்ஸ்போர்டு. 1991. கையடக்கமான ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி. இரண்டாம் பதிப்பு. கிலாரண்டன் பிரஸ், ஆக்ஸ்போர்டு. ஐஸ்பின் 0-19-514691-3
  2. http://news.nationalgeographic.com/news/2002/08/photogalleries/0802_snakes1.html
  3. மெரியம் வெப்ஸ்டர் இணைய அகராதியில் 'அனகோண்டா'
  4. "Etymology Explorer - HENAKANDAYA". Roots.jrobertsons.com. Archived from the original on 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  5. "Sinhalese etymology of henakandaya". myEtymology.com. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  6. "சிறீலங்கா வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம்". Archived from the original on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.
  7. "anaconda - Wiktionary". En.wiktionary.org. 2009-12-29. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  8. "Anaconda". Wordswarm.net. Archived from the original on 2010-05-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  9. பாயில், ரிச்சர்டு (2008). Sinbad In Serendib. Visidunu Publication. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9551741037.
  10. ரிச்சர்டு பாயில். ""The Anaconda of Ceylon": Derivations and the myths". பார்க்கப்பட்ட நாள் 2010-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைக்_கொன்றான்&oldid=3543247" இலிருந்து மீள்விக்கப்பட்டது