ஆனைக் கற்றாழை அல்லது யானைக் கற்றாழை[1] (Agave americana) என்பது பொதுவாக நூற்றாண்டுத் தாவரம் என அழைக்கப்படும் அகேவ் இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது மெக்சிகோவை தனது பூர்விக இடமாகக் கொண்டிருந்தாலும் அழகுத் தாவரமாக பல்வேறு பிரதேசங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஐரோப்பா, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களில் இயற்கை மயமாக்கப்பட்டுள்ளது.
8 மிற்றர் வரை உயரமாக போர்த்துக்கலில் வளர்ந்திருக்கும் ஆனைக் கற்றாழை (Agave americana)
இது நூற்றாண்டுத் தாவரம் எனக் கூறப்பட்டாலும் இது 10 தொடக்கம் 30 வருடங்களே உயிர்வாழக் கூடியது. இதன் இலைகள் வரண்ட காலநிலைக்கு ஏதுவாக பல்வேறு இசைவாக்கங்களைக் கொண்டுள்ளது. இது தனது வாழ்நாளின் இறுதியில் நுனிவளரா முறைப் பூந்துணர் ஒன்றை உருவாக்கும். இப்பூந்துணர் 8 மீற்றர் உயரமானது. தனது சக்தி முழுவதையும் பூத்தலில் செலவிடுவதால் இது பூத்தலின் பிற்பாடு இறந்து விடும்.