ஆனேகுந்தி
ஆனேகுந்தி
ஆனேகொந்தி கிட்கிந்தை | |
---|---|
கிராமம் | |
அடைபெயர்(கள்): கிட்கிந்தை நகரம் | |
ஆள்கூறுகள்: 15°21′10″N 76°29′31″E / 15.3527°N 76.4919°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | கொப்பள் மாவட்டம் |
ஏற்றம் | 568 m (1,864 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,733 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பாலின விகிதம் | 1740:1757[1] ♂/♀ |
ஆனேகுந்தி (Anegundi) முன்பு கிட்கிந்தை என்று அழைக்கப்பட்ட ஓர் கிராமமாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பள் மாவட்டத்தில்கங்காவதி வட்டத்தில் உள்ளது.[2] துங்கபத்திரை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அம்பியை விட இது பழமையானது. ஊச்சப்பாயன மாதா கோயில் (கருப்புக்கல் தூண்கள் மற்றும் நடனச் சிற்பங்களுடன் கூடிய கோயில்), பம்பா சரோவர், ஒரு பாழடைந்த அரண்மனை, இரங்கநாதர் கோயில், கமால் மகால், நவ பிருந்தாவனம் ஆகியவை இவ்வூரில் முக்கியமான ஈர்ப்புகள் ஆகும். அருகிலுள்ள கிராமமான நிம்வபுரத்தில், இராமாயண வாலியை எரிக்கப்பட்ட எச்சங்கள் என்று நம்பப்படும் சாம்பல் மலை உள்ளது.
ஆனேகுந்தி, அம்பியுடன் சேர்ந்து சிறந்த முறையில் பார்வையிடப்படுகிறது. இது உலகப் பாரம்பரியக் களமான அம்பியின் ஒரு பகுதியாகும். இது உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டு, உள்ளூர் மக்களை அவர்களின் கலாச்சார செல்வத்தை உணர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. கிராமத்தில் இருக்கும் குளங்கள் சுத்தமான குடிநீரை சேமித்து வைக்க மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முறையான வடிகால் வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனேகுந்தியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக 'கிட்கிந்தை அறக்கட்டளை' செயல்பட்டு வருகிறது.
புராணம்
[தொகு]இராமாயண இதிகாசத்தில் கிட்கிந்தை (கிட்கிந்தை என்றால் உள்ளூர் மொழியில் குரங்குகள் வாழ்ந்த காடு என்று பொருள்) குரங்கு இராச்சியம் என்று நம்பப்படும் ஆனேகுந்தி, அம்பியின் வரலாற்று தளத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இராமாயணத்துடன் தொடர்புடைய அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையும், ரிசிமுக மலையும் ஆனேகுந்திக்கு அருகிலுள்ள மற்ற இடங்களாகும். இது 3,000 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்ட கிரகத்தின் மிகப் பழமையான பீடபூமிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. எனவே, உள்ளூர் கதை சொல்பவர்கள் மட்டுமே ஆனேகுந்தியை பூதேவியின் தாய்வீடு என்று குறிப்பிடுகிறார்கள் (தாய் பூமி).
துங்கபத்திரை ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள இந்த கிராமம், சுக்கிரீவனின் இராச்சியமான பழம்பெரும் கிட்கிந்தை என்றும், புகழ்பெற்ற விஜயநகரப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஷ்ணதேவராய வம்சத்தின் தொட்டில் இடமாகவும், அம்பியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
ஆனேகுண்டியில் காளஹஸ்தாச்சாரியாரால் நிறுவப்பட்ட சரசுவதி பீடம் என்ற மத மடம் உள்ளது. மடம் சங்கராச்சாரியாரின் அத்வைத சம்பிரதாயத்தைப் பின்பற்றுகிறது. இது விசுவகர்மாவின் குரு பீடமாகும். ஸ்ரீ ஸ்ரீ காளஹஸ்தேந்திர சரஸ்வதி சுவாமிஜி என்பவர் தற்போதைய மடாதிபதியாக உள்ளார். இந்த மடத்தின் முக்கிய கிளை உடுப்பி மாவட்டத்தின் ஆனேகுந்தியின், படுகுத்தியார் என்ற இடத்தில் உள்ளது.
பாறைக் கல்வெட்டு
[தொகு]ஆனேகுந்தியில் 'ஒனகே கிந்தி' என்று அழைக்கப்படும் வரலாற்றுக்கு முந்தைய குடியிருப்பு ஒன்று உள்ளது.[3] ஓவியங்களுடன் கூடிய பாறை களில், சில சிவப்பு , வெள்ளை அடையாளங்களில் ஒரு பாறையில் மனிதன், காளை உருவங்கள் இருக்கின்றன. மற்றொரு பாறை மீது சூரியன் மற்றும் சந்திரன் போன்ற ஒரு வட்ட வரைபடமும், சில குறியீடுகளும் உள்ளன. உண்மையில் பாறை ஓவியம் இரும்புக் காலத்தைச் சேர்ந்தது. கிமு 1500க்கு முந்தையது. மங்கலான வட்ட ஓவியம் பெருங்கற்கால புதைகுழியின் மிகவும் அரிதான சித்தரிப்பு, ஒரு கல் வட்டம் மற்றும் புதைக்கப்பட்ட பொருட்களால் சூழப்பட்ட ஒரு மனித உடலையும் உள்ளடக்கியுள்ளது.மலைகளில் அமைந்துள்ள பெருங்கற்கால கல்திட்டைகளின் தளத்தை உள்ளூர்வாசிகள் மௌரிய மனே என்று அழைக்கிறார்கள் (மௌரியா என்றால் உள்ளூர் மொழியில் குறுகளானது எனப் பொருள் ). சுமார் ஐந்து முதல் ஏழு அடி உயர தாள் பாறைகள் நான்கு சுவர்களை உருவாக்குகின்றன மற்றும் மற்றொரு பாறை கூரையாகப் பயன்படுத்தப்படுள்ளது. (புதிய கற்காலம்). பெனகலில் இருந்து இந்தராகி குடா வரை எழு குடா மலைத்தொடரில் உள்ள கற்கால குடியிருப்புகளான ஆனேகுந்தியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளது. ஆனேகுந்தியில் இருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில், மலைத்தொடர்களில் பாறைகள் மற்றும் ஓவியங்கள் உள்ளன. அவை உள்ளூரில் 'ஏழு குட்டா சாலு' என்று அழைக்கப்படுகின்றன.
விஜயநகர காலத்திற்கு முந்தைய காலம்
[தொகு]கன்னடத்தில் ஆனேகுந்தி என்றால் யானைப் பள்ளத்தாக்கு எனப் பொருள். இது அம்பியை விட பழமையானது (விஜயநகரத்தின் தொட்டில் நகரம்). ஆனேகுந்தியின் வரலாறு கிமு 3ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசின் கீழ் இருந்து தொடங்குகிறது. ஆனேகுந்தி சாதவாகனர்கள் , கதம்பர்கள், சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள், தில்லி சுல்தான்களின், விஜயநகர பேரரசு, பாமினி சுல்தான்கள் போன்ற பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டது. இப்போது இந்த இடம் நன்கு அறியப்பட்ட சுற்றுலா தலமாக உள்ளது.
விஜயநகர காலம்
[தொகு]14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கன்னடத்தில் ஆனேகுந்தி என்று அழைக்கப்படும் யானை அடைப்பு , விஜயநகரப் படையின் யானைப் படையின் காரணமாக பெயரிடப்பட்டது.[4] விஜயநகரப் பேரரசின் முதல் தலைநகரம் மற்றும் பல வம்சங்களின் தலைநகரமாக இருந்தது. 1334 ஆம் ஆண்டில், ஆனேகுந்தியின் முதலமைச்சர் தேவ ராயர் ஆனேகுந்தியின் முதல் ஆட்சியாளரானார். தில்லி சுல்தான்கள் வாரங்கல் மீது படையெடுத்தபோது, ஹரிஹரரும், புக்கரும் தப்பித்து இங்கு வந்தனர். பின்னர் அம்பியில் விஜயநகரப் பேரரசை நிறுவினர்.
16, 17 , 18 ஆம் நூற்றாண்டுகளில், ஆனேகுந்தி பிஜப்பூர் சுல்தான்கள், முகலாயர்கள், மராட்டியர்கள், திப்பு சுல்தான் ஆகியோரால் ஆளப்பட்டது. 1824ஆம் ஆண்டு பிரித்தானியர்களுக்கும் ஐதராபாத் நிசாமுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, அம்பியில் இருந்து ஆட்சி செய்த விஜயநகர மன்னர் மூன்றாம் ஸ்ரீரங்கா தனது இராச்சியத்தை இழந்தார். மாதாந்திர ஓய்வூதியமாக ரூ 300 பெற்று வந்தார். அவர் அம்பியை விட்டு வெளியேறி ஆனேகுந்தியை அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடைசி வழித்தோன்றல் இராணி லால்குமாரி பாய் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வந்தார் .
ஆனேகுந்தி கோட்டை
[தொகு]ஆனேகுந்தியில் பல வாயில்கள் கொண்ட ஒரு கோட்டை உள்ளது. இதில் ஒரு துர்கா கோயிலும், கோட்டை நுழைவாயிலும் உள்ளது. மேலும் கல்லறைகள் சிதறிக்கிடக்கின்றன. விநாயகர் குகைக் கோயிலும் உள்ளது. விஜயநகர மன்னர்கள் ஒவ்வொரு போருக்கு முன்பும் துர்கா கோவிலில் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் அவர்கள் பம்பா சரோவருக்கும், இலட்சுமி கோவிலுக்கும் செல்வார்கள். [5] விஜயநகரப் பேரரசின் அரச பரம்பரையினர் இன்றும் ஆனேகுந்தியில் உள்ளனர்.
புகைப்படங்கள்
[தொகு]Photo Gallery
|
---|
|
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "View Population". Office of the Registrar General & Census Commissioner, India.
- ↑ The Hindu - Anegundi bracing itself to charm tourists
- ↑ "Where time has stopped". பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.
- ↑ "Anegundi: Of history and mysticism". பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
- ↑ Sharath, Lakshmi (2010-10-01). "Gateway to the past". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/features/metroplus/travel/gateway-to-the-past/article806877.ece.