உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனி தாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனி தாயில்
பிறப்பு(1918-11-10)10 நவம்பர் 1918
செங்கலூர், புதுகாடு, திருச்சூர், கேரளம், இந்தியா
இறப்பு21 அக்டோபர் 1993(1993-10-21) (அகவை 74)
கேரளம்
படித்த கல்வி நிறுவனங்கள்
பணி
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • கிறுஸ்து மரிச்ச திவசம்
  • கோச்சமினி
  • மோளென்டே மோன் நின்டே
  • ஹங்கேரியில் எந்துந்தாயி?
வாழ்க்கைத்
துணை
குரியன் தாயில்

ஆனி தாயில் (Annie Thayyil,10 நவம்பர் 1918-21 அக்டோபர் 1993) ஒரு புதின எழுத்தாளரும், பத்திரிகையாளரும், மொழிபெயர்ப்பாளரும், மலையாள மொழியின் வாழ்க்கை வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் 1945 முதல் 1948 வரை கொச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது படைப்புகளில் புதினம், சுயசரிதை, அரசியல், பயணக் கதை, விவிலிய இலக்கியம் ஆகிய வகைகளை உள்ளடக்கிய 78 புத்தகங்கள் உள்ளன. இவர் சாகித்திய பரிசத்தின் செயலாளராகவும், கேரள சாகித்ய அகாதமியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

ஆனி தாயில் என்கிற ஆனி ஜோசப்,[1] தென்னிந்திய மாநிலமான கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புதுக்காட்டில் உள்ள செங்கலூரில் மாலியேக்கல் ஜோசப் மற்றும் மேரி ஆகியோருக்கு மகளாகப் நவம்பர் 10, 1918 அன்று பிறந்தார்.[2] எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியல்

[தொகு]

திருவிதாங்கூர் மாநிலப் பணியில் சேர்ந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் 1945 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு கொச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1948 தேர்தல்களில் மீண்டும் அதே இடத்தை வென்றார்.[3]

பிறகு மேலும் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1964-இல் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக மாநிலங்களவைக்கும் 1967-இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகவும் மற்றும் 1970 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டார்.[4][5] ஈ.எம்.எஸ் தலைமையில் 1958–59 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளாவின் விடுதலைப் போராட்டத்திலும் இவர் பங்கேற்றார். பின்னர், ​​சட்டம் பயின்ற ஆனி ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெறத் தொடங்கினார். இடையில், இவர் கொச்சியில் ஸ்காலர் பிரஸ் என்ற பெயரில் ஒரு அச்சுத் தொழிலை நடத்தினார். 1960 இல் ‘சமஸ்த கேரள சாகித்ய பரிசத்தின்’ செயலாளராகப் பணியாற்றினார். வனிதா மற்றும் ‘பிரஜாமித்திரம்’ என்ற இரண்டு பத்திரிகைகளைத் திருத்தி வெளியிட்டார். 1984–85 ஆம் ஆண்டில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் பணியாற்றினார். மேலும் ‘மத்திய சமூக நல வாரியம்’, ‘கத்தோலிக்க காங்கிரசு’ மற்றும் ‘கேரள சாகித்ய அகாதமி’யின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[6]

எழுத்துகள்

[தொகு]

கத்தோலிக்கர்களிடையே நிலவும் மரபுவழி கருத்துக்களை விமர்சித்து இவர் எழுதிய மோளென்டே மோன் நின்டே சர்ச்சைக்குள்ளானது.[7][8] போரும் அமைதியும், அன்னா கரேனினா, தி கொன்ட ஓபி மான்டே கிறிஸ்டோ, டெஸ் ஆஃப் தி டி 'அர்பர்வில்லெஸ் மற்றும் தி ஹோலி சின்னர் போன்ற உலக இலக்கியங்களின் பல நூல்களை சுருக்கமான பதிப்புகளாகப் பிரசுரிக்க இவர் மொழிபெயர்த்தார், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோரின் சுயசரிதைகளையும் எழுதினார்.[9] ஹங்கேரியில் எந்துந்தாயி? (ஹங்கேரியில் என்ன நடந்தது? ) என்ற அரசியல் வர்ணனையையும் வெளியிட்டார். விவிலிய எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்து மரிச்ச திவசம் (கிறிஸ்து இறந்த நாள்) என்பது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை குறித்த ஒரு படைப்பாகும்.[10][11] எடங்கழியில் குரிசு என்ற தனது சுயசைரிதையையும் எழுதினர்.[12]

சொந்த வாழ்க்கை

[தொகு]

குரியன் தாயில் என்பவரை மணந்த ஆனி, 1993 அக்டோபர் 21 அன்று தனது 74 வயதில் காலமானார்.[13]

கௌரவம்

[தொகு]

சமூக சேவை, கல்வி, இலக்கியம், நிர்வாகம், அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம், சுகாதாரம், ஊடகம், விளையாட்டு, நடிப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களைக் கௌரவிக்கும் வகையில் கேரள அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் ஆண்டுதோறும் வனிதா இரத்னம் விருதுகளை வழங்கி வருகிறது.[14][15] அக்கம்மா செரியன், இலட்சுமி சாகல், கமலா தாஸ், இராணி இலட்சுமிபாய், எம். பாத்திமா பீவி, மிருணாளினி சாராபாய், மேரி பூனன் உலூகோசு, ஏ. வி. குட்டிமாலு அம்மா, சுகுமாரி மற்றும் அன் மசுகரேன் போன்ற பிற குறிப்பிடத்தக்க இந்திய பெண்களுடன் சேர்ந்து ஆனி தாயிலையும் இவ்விருது வழங்கி கௌரவித்தது.[16][17] பல்வேறு துறைகளில் பெண்களின் சிறப்பை ஆண்டுதோறும் இந்த விருது அங்கீகரிக்கிறது.[18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas, Rosie (2021). Evan Ente Priya C.J. (in Malayalam) (3rd ed.). Kottayam: D C Books. p. 30.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-23. Retrieved 2019-04-23.
  3. J. Devika; Binitha V. Thampi (25 June 2012). New Lamps for Old?: Gender Paradoxes of Political Decentralisation in Kerala. Zubaan. pp. 91–. ISBN 978-93-81017-39-5.
  4. Indian National Congress. All India Congress Committee (1970). From Delhi to Patna: Congress Marches Ahead. All India Congress Committee. pp. 247–.
  5. Socialist India. Indian National Congress. All India Congress Committee. 1970. pp. 178–.
  6. "Women Writers of Kerala". womenwritersofkerala.com. 2019-04-24. Retrieved 2019-04-24.
  7. "Social Background of Women Writers" (PDF). Shodhganga. 2019-04-24. pp. 128–129. Retrieved 2019-04-24.
  8. "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-23. Retrieved 2019-04-23.
  9. K. M. George (1972). Western Influence on Malayalam Language and Literature. Sahitya Akademi. pp. 212–. ISBN 978-81-260-0413-3.
  10. "Annie Thayyil - biography". keralaliterature.com. Retrieved 2019-04-24.
  11. "Women Writers of Kerala". womenwritersofkerala.com. 2019-04-24. Retrieved 2019-04-24.
  12. Annie Thayyil (1990). Edangazhiyile kurisu: aathma katha. Kottayam, D C Books.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  13. "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-23. Retrieved 2019-04-23.
  14. "'Vanitha Rathnam' awards instituted" (in en-IN). The Hindu. 2013-12-20. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/vanitha-rathnam-awards-instituted/article5481385.ece. 
  15. "Living conditions for women better in Kerala: Chief Minister Pinarayi Vijayan on Women's Day". The New Indian Express. 9 March 2018. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2018/mar/09/living-conditions-for-women-better-in-kerala-chief-minister-pinarayi-vijayan-on-womens-day-1784182.html. 
  16. "Vanita Ratna Awards to be presented today in Thiruvananthapuram". The New Indian Express. 8 March 2017. Retrieved 2019-04-24.
  17. "Govt to organise week-long celebrations for Women's Day - Times of India". The Times of India. 7 March 2018. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/govt-to-organise-week-long-celebrations-for-womens-day/articleshow/63196798.cms. 
  18. "'Vanitha Rathnam' awards instituted". The Hindu (in Indian English). 2013-12-20. Retrieved 2019-04-24.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


</nowiki>

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_தாயில்&oldid=4340152" இலிருந்து மீள்விக்கப்பட்டது