உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனி இராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 ஆம் ஆண்டு கொல்லத்தில் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக் கட்சி மாநாட்டில் ஆனி இராசா.

ஆனி இராசா (Annie Raja) என்பவர் பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில் முன் நிற்பவர். இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பில் பொதுச் செயலராக இருக்கிறார்.[1] கேரளத்தில் பிறந்த ஆனி உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்தவர். ஆங்காங்கே நிலவும் பெண்களின் அவல நிலைகளை நேரடியாக அறிந்தவர். 2009 திசம்பரில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ஒரு குழு சீனாவுக்குச் சென்றது. அக்குழுவுக்கு ஆனி இராசா தலைமை வகித்தார்.[2] இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் து. ராஜாவின் மனைவி ஆவார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_இராசா&oldid=3942068" இலிருந்து மீள்விக்கப்பட்டது