ஆனந்த வீரசேகர
இலங்கைப் படைத்துறைப் பணித்தலைவர் ஆனந்த வீரசேகர ராணா விக்ரம பதக்கம்(ஆர்.டபிள்யு.பி), உத்தம சேவா பதக்கம் (யு.எசு.பி) | |
|---|---|
| பிறப்பு | 29 ஏப்ரல் 1943 [1] |
| இறப்பு | 28 திசம்பர் 2021 (அகவை 78) |
| சார்பு | |
| சேவை/ | |
| தரம் | |
| படைப்பிரிவு | இலங்கை சின்கா படைப்பிரிவு |
| போர்கள்/யுத்தங்கள் | 1971 கிளர்ச்சி,இலங்கை உள்நாட்டுப் போர், 1987–1989 ஜே.வி.பி கிளர்ச்சி |
| விருதுகள் | |
ஆனந்த வீரசேகர (Ananda Weerasekara)(படைத்துறைப் பணித்தலைவர் ஆனந்த வீரசேகர) (29 ஏப்ரல் 1943 – 28 திசெம்பர் 2021)இலங்கை இராணுவ அதிகாரியும்,துறவியும் ஆவார். இவர் 1987–1989 ஜேவிபி கிளர்ச்சியின் போது வட மத்திய மாகாணத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.
இவர்,மெண்டிசு மற்றும் சுமனா வீரசேகர தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . இவர் கொழும்பில் உள்ள நலந்தா கல்லூரியில் கல்வி பயின்றார். 1964இல் இலங்கை இராணுவத்தில் பயிற்சி அதிகாரியாகச் சேர்ந்தார். தனது அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு, சிலோன் சின்ஹா படைப்பிரிவின் 1ஆவது படைப்பிரிவில் இரண்டாம் இளயரையராக நியமிக்கப்பட்டார். இவர் 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது போர்க்களத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். 1986ஆம் ஆண்டில், பேரரையர் வீரசேகர, இலங்கை சின்கா படையணியின் 4ஆவது படைப்பிாிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் இவர் 1987 முதல் 1988 வரை புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை சின்கா படையணியின் 6ஆவது படைப்பிாிவின் முதல் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார்.[2][3] 1987–1989 ஜேவிபி கிளர்ச்சியின் போது, வீரசேகர வட மத்திய மாகாணத்திற்கான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றினார். மேலும் 1990இல் புனர்வாழ்வுக்கான ஆணையர் நாயகமாகப் பணியாற்றினார். பேரரையர் டென்சில் கொப்பேகடுவவின் மரணம் குறித்த சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் 1997இல் இவர் தொடர்புபடுத்தப்பட்டார். வீரசேகர படைத்துறைப் பணித்தலைவர் விஜய விமலரத்னவுடன் சேர்ந்து கொப்பேகடுவவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.[4] 1998இல் படைத்துறைப் பணித்தலைவர் பதவியுடன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், இவர் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகளின் பிரதித் தலைவராகப் பணியாற்றினார். மேலும், சிங்கள உருமயவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த சிங்கள வீர விதானத்துடன் தொடர்புடைய உள்ளூர் தேசியவாத அரசியலிலும் தீவிரமாகச் செயல்பட்டார்.
2000இல், அனுராதபுரத்தில் 1989இல் ஜேவிபி சந்தேக நபர்களை சித்திரவதை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்..[5][6][7]
1 மே 2007அன்று, இவர் புத்தங்கல ஆனந்தா என்ற பௌத்த துறவற அமைப்பில் சேர்ந்தார்.[8] வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் 28 டிசம்பர் 2021 அன்று, 78ஆவது வயதில் காலமானார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Major General Ananda Weerasekera Soldier in search of Supreme bliss". The Island. 2 March 2011. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=19668. பார்த்த நாள்: 11 May 2016.
- ↑ "4 Sri lanka Sinha Regiment". army.lk. Sri Lanka Army. Retrieved 30 December 2021.
- ↑ "6th Battalion of the Sri Lanka Sinha Regiment". Sri Lanka Army. https://alt.army.lk/slsr/6slsr_appoinment.
- ↑ Mudliyar. "Bandaranayake vs. Yapa 'Many wrong things have been done'". Sunday Times. https://www.sundaytimes.lk/970406/news4.html.
- ↑ "Sri Lankan general protests innocence". BBC. https://news.bbc.co.uk/2/hi/south_asia/867214.stm.
- ↑ "President pays last respects to Ven. Buddhangala Ananda Thera". adaderana.lk. http://www.adaderana.lk/news/79509/president-pays-last-respects-to-ven-buddhangala-ananda-thera.
- ↑ Epasinghe. "A very strange transition From top military brass to Buddhist Order:". SundayO bserver. https://archives.sundayobserver.lk/2007/05/13/fea06.asp.
- ↑ "From battlefield to the Buddha?s path". lankanewspapers.com. 2 May 2007. Archived from the original on 11 September 2007. Retrieved 11 May 2016.
- ↑ "Ven. Buddangala Ananda Thero passes away". Sinhala News. 28 December 2021. https://thesinhalanews.lk/2021/12/28/ven-buddangala-ananda-thero-passes-away-breaking-news/.
- "A very strange transition by Premasara Epasinghe". Sunday Observer. 13 மே 2007. Archived from the original on 5 சூன் 2011. Retrieved 16 ஏப்ரல் 2011.
- "Buddhangala Aranyaya (Hermitage)". Buddhangala Hermitage. Archived from the original on 11 September 2011. Retrieved 16 April 2011.