உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்த பைரவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த பைரவி
Ananda Bhairavi
சுவரொட்டி
இயக்கம்சந்தியாலா
தயாரிப்புஅசுவனி கார்த்திகா சித்ரா, பி. ஏ. வி. சாண்டில்யா
கதைசந்தியாலா (வசனம்)
திரைக்கதைசந்தியாலா
இசைஇரமேசு நாயுடு
நடிப்புகிரீஷ் கர்னாட்
காஞ்சனா
மாளவிகா சர்க்கார்
இராச்சேசு (தெலுங்கு நடிகர்
ஒளிப்பதிவுஎசு. கோபால் ரெட்டி
படத்தொகுப்புகௌதம் இராசு
கலையகம்கல்யானி ஆர்ட் பிலிம்சு
வெளியீடு25 ஆகத்து 1983 (1983-08-25)
ஓட்டம்143 நிமிடங்கள்
மொழிதெலுங்கு மொழி
கன்னடம்

ஆனந்த பைரவி (Ananda Bhairavi) என்பது 1983-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய இருமொழி நடனத் திரைப்படமாகும். தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.[1] இத்திரைப்படத்தை சந்தியாலா இயக்கி, கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.[2] கிரீசு கர்ணாட்டு, கதக் நடனக் கலைஞர் மாளவிகா சர்க்கார், தெலுங்கு நடிகர் இராச்சேசு மற்றும் "நாட்டியாச்சார்யா" பகவத்துல வெங்கட ராம சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சர்மா இப்படத்தில் ஒரு ஆண் செவ்வியல் நடனக் கலைஞராகத் தோன்றியுள்ளார்.[3] இத்திரைப்படம் இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. [3][4] விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன், நான்கு மாநில நந்தி விருதுகளையும் வென்றது.

கதை

[தொகு]

குச்சிப்புடி நடனத்தின் தோற்றம் குறித்த அறிவை வழங்கும் ஒரு திரைப்படமாகும். குச்சிப்புடி நடனத்தை ஒரு பெண் ஆடுவது அவமானத்திற்குரிய செயல் என்று கருதிய மக்களையும், குச்சிப்புடி மரபை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்காகத் தன் முழு வலிமையையும் திரட்டிப் போராடிய ஒரு மனிதனையும் பற்றியதே இத்திரைப்படம். இறுதியில், குச்சிப்புடி நடனத்தைக் கற்பிப்பதற்காக ஒரு பெண்ணை அவரால் கண்டறிய முடிகிறது. அக்காலத்தில் பெண்கள் குச்சிப்புடி பயில்வது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக இருந்ததால், அவர் தனது சாதியிலிருந்தும், தான் வசித்த இடத்திலிருந்தும், ஏன் வழிபாட்டுத் தலங்களிலிருந்தும் கூட ஒதுக்கிவைக்கப்படுகிறார்.[1]

நடிகர்கள்

[தொகு]

ஒலிப்பதிவு

[தொகு]
தெலுங்கு
  • "பிரம்மாஞ்சலி" - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • "பிலிச்சின முரளிகி" - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • "கொழுவைடிவா ரங்க சாயி - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
  • "சைத்ரமு குசுமாஞ்சலி" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • "ரா ராகமை" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
கன்னடம்
  • "பிரம்மாஞ்சலி" - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • "ஆதுவா முரளியா" - எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
  • "மாலகிருவேய ரங்கநாதா" - எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
  • "சைத்ரதா குசுமாஞ்சலி" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • "பா பா பா ராகவாகி" - எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

விருதுகள்

[தொகு]
நந்தி விருதுகள் - 1983 <[5]

சிறந்த திரைப்படம் - தங்கம் - பூபால் ரெட்டி & சீத்தா பத்மராசு (1983) சிறந்த இயக்குனர் - சந்தியாலா இரண்டாவது சிறந்த திரைக்கதை ஆசிரியர் - கே. எசு. சந்திர மூர்த்தி சிறந்த ஒளிப்பதிவு - எசு. கோபால் ரெட்டி

பிலிம்பேர் விருது தெற்கு

சிறந்த நடிகர் - கன்னடம் - கிரீசு கர்னாடு[3]

மேற்கோள்

[தொகு]
  1. 1 2 "Ananda Bhairavi Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes" via timesofindia.indiatimes.com.
  2. "Taught himself Kuchipudi at 55 for 'Ananda Bhairavi'". The New Indian Express. 10 June 2019.
  3. 1 2 3 Rajadhyaksha, Ashish; Willemen, Paul (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Routledge. ISBN 9781135943189 via Google Books.
  4. "Rich tributes paid to Jandhyala". The Hindu. 20 June 2006 via www.thehindu.com.
  5. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Andhra Pradesh (magazine). Retrieved 21 August 2020.(in Telugu language]])
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_பைரவி_(திரைப்படம்)&oldid=4499580" இலிருந்து மீள்விக்கப்பட்டது