ஆனந்த பவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த பவனம்
ஆனந்த பவனம் எழில்மிகு தோற்றம்
Map
நிறுவப்பட்டது1930
அமைவிடம்பிரயாக்ராஜ் (முன்னர் அலகாபாத்), இந்தியா
ஆள்கூற்று25°27′34″N 81°51′36″E / 25.459376°N 81.8599815°E / 25.459376; 81.8599815
வகைவரலாற்று சிறப்புமிக்க இல்லம், அருங்காட்சியகமாக

ஆனந்த பவனம் (Anand Bhavan) என்பது நேரு குடும்பத்தை மையமாக வைத்து, இந்தியாவின் பிரயாக்ராஜில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகம் ஆகும்.[1] 1930களில் இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேருவால் நேரு குடும்பத்தின் வசிப்பிடமாக இது இருந்தது. இந்த மாளிகையான ஆனந்த பவன் இந்திய தேசிய காங்கிரஸின் உள்ளூர் தலைமையகமாக மாற்றப்பட்டது.[2] ஜவகர் கோளரங்கம் இங்கு அமைந்துள்ளது. இது வானியல் மற்றும் அறிவியலில் அதன் வான் காட்சிகள் மூலம் மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கப் பாடுபடுகிறது.[3]

1970ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமரும் மோதிலால் நேருவின் பேத்தியும் மற்றும் ஜவகர்லால் நேருவின் மகளுமான இந்திரா காந்தியால், இந்திய அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.[4]

படம்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_பவனம்&oldid=3579486" இருந்து மீள்விக்கப்பட்டது