உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்த நாயக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த நாயக்கு
அலுவல் படம்
உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்சந்திராணி முர்மு
தொகுதிகியோஞ்சர்
பதவியில்
1999–2009
முன்னையவர்உபேந்திர நாத் நாயக்கு
பின்னவர்யசுபந்த் நாராயண் சிங் லாகுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1969 (1969-05-01) (அகவை 56)
கேந்துசர், ஒடிசா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இலாபாகாலாடா நாயக்கு
பிள்ளைகள்அந்தாரியாமி நாயக்கு
வாழிடம்கேந்துசர், ஒடிசா
மூலம்: [biography Loksabha Profile]

ஆனந்த நாயக்கு (Ananta Nayak-பிறப்பு: 1 மே 1969) இந்தியாவின் 18ஆவது மக்களவையில் உறுப்பினராக உள்ள இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசா கியோஞ்சர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நாயக்கு பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[1]

நாயக்கு தனது 30ஆவது வயதில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் கெந்துஜார் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். கெந்துஜார் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் (1999 & 2004) வெற்றி பெற்றுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் பழங்குடி அணியின் தலைவராக உள்ளார்.

பிப்ரவரி 24, 2021 அன்று இவர் இந்திய அரசியலமைப்பின் 338ஏ பிரிவின் கீழ் அரசியலமைப்பு அமைப்பான பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் செயல்பாடு

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:கியோஞ்சர்[2][3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஆனந்த நாயக்கு 5,73,923 45.67
பிஜத தனுர்ஜெ சித்து 4,76,881 37.95
காங்கிரசு பினோத் பிகாரி நாயக்கு 1,04,944 8.38
நோட்டா நோட்டா 24,763 1.97
வாக்கு வித்தியாசம் 97,042 7.72
பதிவான வாக்குகள் 12,58,771 79.17
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RESUME OF ANANTA NAYAK". ncst.nic.in. Archived from the original on 20 May 2023.
  2. "General Election to Legislative Assembly of Odisha 2024". Election Commission of India.
  3. "Keonjhar (ST) lok sabha election results 2024: Keonjhar (ST) Winning Candidates List and Vote Share". India Today (in ஆங்கிலம்). Retrieved 2025-07-06.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_நாயக்கு&oldid=4404628" இலிருந்து மீள்விக்கப்பட்டது