ஆனந்த தேவ் பட்டா
ஆனந்த தேவ் பட்டா AnandaDevBhatta | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 1936[1] சூம்லா மாவட்டம், கர்ணாலி பிரதேசம், நேபாளம் |
இறப்பு | 30 ஆகத்து 2021 காட்மாண்டு | (அகவை 84)
அரசியல் கட்சி | நேபாள பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | சுசிலா பட்டா |
பிள்ளைகள் | 2 |
வேலை | எழுத்தாளர், அரசியல்வாதி, பேராசிரியர் |
ஆனந்த தேவ் பட்டா (AnandaDevBhatta) நேபாள நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார்.1936 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். நேபாள பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த இவர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவராக இருந்தார்.[2][3]
கல்வி
[தொகு]ஆனந்ததேவ் பட்டா 1960 ஆம் ஆண்டு இந்தியாவின் பாட்னா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மேற்கு யார்க்சயரில் உள்ள இலீட்சு பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டயத்தைப் பெற்றார்.1983 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அரசியல்
[தொகு]ஆனந்ததேவ் பட்டா 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பைதாடி-2 தொகுதியில் போட்டியிட்டு 7611 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[4]
இறப்பு
[தொகு]2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதியன்று ஆனந்த தேவ் பட்டா காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Noted progressive literary writer Bhatta passes away". Khabarhub (in ஆங்கிலம்). August 30, 2021. Archived from the original on 30 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 18 January 2007.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Veteran progressive writer Bhatt no more". Republica. 30 August 2021. https://myrepublica.nagariknetwork.com/mycity/amp/veteran-progressive-writer-bhatt-no-more.
- ↑ Election Commission of Nepal பரணிடப்பட்டது 12 அக்டோபர் 2006 at the வந்தவழி இயந்திரம்