ஆனந்த் மகிந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த் கோபால் மகிந்திரா
பிறப்பு1 மே 1955 (1955-05-01) (அகவை 68)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்[1][2]
ஆர்வர்டு வர்த்த பள்ளி (எம்பிஏ)[2]
பணிதொழிலதிபர்
சொத்து மதிப்புUS$1.6 பில்லியன் (சனவரி 2020)[3]
பட்டம்தலைவர், மகிந்திரா குழுமம்
வாழ்க்கைத்
துணை
அனுராதா மகிந்திரா
பிள்ளைகள்2 மகள்கள்
வலைத்தளம்
www.mahindra.com

ஆனந்த் கோபால் மகிந்திரா (Anand Mahindra) (பிறப்பு: மே 1, 1955) ஓர் இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மும்பையை தளமாகக் கொண்ட மகிந்திரா குழுமம் என்ற வணிக நிறுவனத்தின் தலைவருமாவார்.[4][5][6][7] இக்குழு விண்வெளி, வேளாண் வணிகம், வர்த்தகச் சந்தை, வாகனம், கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, எரிசக்தி, பண்ணை உபகரணங்கள், நிதி மற்றும் காப்பீடு, தொழில்துறை உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பம், தளவாடங்கள், நில வணிகம் மற்றும் சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது. இவர் மகிந்திரா அண்டு மகிந்திராவின் இணை நிறுவனர் செகதீசு சந்திர மகிந்திராவின் பேரன் ஆவார்

2020 ஆம் ஆண்டு சனவரி நிலவரப்படி, இவரது நிகர மதிப்பு 6 1.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆர்வர்டு வர்த்தகப் பள்ளியின் பழைய மாணவராவார்.[8] 1996 ஆம் ஆண்டில், இந்தியாவில் நலிந்த சிறுமிகளுக்கு கல்வியை ஆதரிக்கும் நன்கி காளி என்ற ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவினார்.[9]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆனந்த் மகிந்திரா 1955 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி இந்தியாவின் மும்பையில் மறைந்த தொழிலதிபர் ஆரிசு மகிந்திரா மற்றும் இந்திரா மகிந்திரா ஆகியோருக்கு பிறந்தார்.[10] ஆனந்திற்கு அனுசா சர்மா மற்றும் ராதிகா நாத் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.[11] லவ்டேல் [12] இலாரன்சு பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரித்தல் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றைப் பயின்றார். 1981 ஆம் ஆண்டில், ஆர்வர்டு வர்த்தகப் பள்ளியில் வணிக மேலாண்மையில் முதுகலை படிப்பை நிறைவு செய்தார்.[8][13]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆனந்த் ஒரு பத்திரிகையாளராக இருந்த அனுராதா என்பவரை மணந்தார். இவரது மனைவி வெர்வ் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவர் தற்போது வெர்வ் மற்றும் மேனுசு வேர்ல்ட் பத்திரிகைகளின் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு திவ்யா, ஆலிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[14][15]

குறிப்புகள்[தொகு]

  1. Bellman, Eric (6 October 2010). "Mahindra Donates $10 Million to Harvard - WSJ.com". Online.wsj. https://www.wsj.com/articles/SB10001424052748703735804575535622456801034. பார்த்த நாள்: 24 சனவரி 2011. 
  2. 2.0 2.1 Anand Mahindra – Harvard Humanities 2.0
  3. "Forbes profile: Anand Mahindra". www.forbes.com. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
  4. "Who We Are: Leadership  – Anand Mahindra". Mahindra. Archived from the original on 10 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Bhupathi Reddy (30 August 2015). "Top 10 Entrepreneurs of India". EntrepreneurSolutions.com. Archived from the original on 26 January 2016.
  6. Srikar Muthyala (29 September 2015). "The List of Great Entrepreneurs of India in 2015". MyBTechLife. Archived from the original on 14 January 2016.
  7. "Pawan Goenka named MD of Mahindra; Anand Mahindra to be executive chairman". Livemint. 11 November 2016.
  8. 8.0 8.1 "ANAND G. MAHINDRA, MBA 1981". Alumni. 1 January 2008.
  9. "ET Awards: Mahindra & Mahindra wins Corporate Citizen award for empowering the girl child". Economic Times. 5 September 2017.
  10. "Anand Mahindra". iloveindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
  11. ""To Think and to Question"". harvardmagazine.com. 27 April 2011.
  12. "Kabaddi deserves a league of its own: Anand Mahindra". Economic Times. 10 April 2014.
  13. "Top gun". Business Today. 2 October 2011.
  14. "Anuradha & Anand Mahindra's Wedding Anniversary". Shaadi.com.
  15. "Anuradha Mahindra: The right mix". Business Standard. 20 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_மகிந்திரா&oldid=3927461" இலிருந்து மீள்விக்கப்பட்டது