ஆனந்த் டெல்டும்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த் டெல்டுடே

ஆனந்த் டெல்டும்டே (Anand Teltumbde) ஒரு இந்திய எழுத்தாளரும், அறிஞரும் மற்றும் சமூக உரிமைப் போராளியுமாவார் . அவர் கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் மேலாண்மை பேராசிரியராக உள்ளார். இந்தியாவில் சாதி அமைப்பு பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேலும், இவர் தலித்துகளின் உரிமைகளுக்காக பொதுவெளியில் வாதிடுபவர்.[1] இவர் மஹாராஸ்டிராவில் ரஜூர் என்ற சிறு நகரில் பிறந்தவர். அவரது மனைவி ரமா, டாக்டர் அம்பேத்காரின் பேத்தி ஆவார்.

கோரேகான் பீமா வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இவரது தம்பி மிலிந்த் டெல்டும்டே மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவரும், நக்சலைட் தலைவரும் ஆவார். 13 நவம்பர் 2021 அன்று மிலிந்த் டெல்டும்டே உள்ளிட்ட 26 நக்சலைட்டுகள், மகாராட்டிரா மாநில காவல்துறையினரால் கட்சிரோலி மாவட்ட வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.[2]

கல்வி மற்றும் பணி[தொகு]

இவர் தனது பொறியியல் பட்டப்படிப்பை விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் முடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பை அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் முடித்தார். கர்நாடக மாநில திறந்த நிலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ முனைவர் பட்டத்தை வழங்கியது.[3] இவர் சைபர்னேடிக் படிமமாக்கலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். [1]

டெல்டும்டே ஒரு கல்வியாளராகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் ஒரு செயல் அலுவலராகவும், பெட்ரோநெட் இந்திய நிறுவனத்தில் நிர்வாக மேலாளராகவும் இருந்தார். [4][5] முதலில் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும், பிறகு கோவா மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.[6][7][4] எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி என்ற பத்திரிக்கையில் "மார்ஜின் ஸ்பீக்" என்ற தலைப்பிலான பத்தியை எழுதி வந்தார். [8] அவுட்லுக் இதழிலும் இவர் தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.[9]மேலும், தெகெல்கா என்ற பத்திரிக்கைக்காகவும்,[10]மற்றும் செமினார் என்ற வலைத்தளத்திலும் எழுதி வந்தார்.[11][12]


புத்தகங்கள்[தொகு]

 • 'சாதியின் குடியரசு'[13]
 • உலகமயமாதலும் தலித்களும்
 • தலித்துகள் - நேற்று இன்று நாளை
 • மஹத் - முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்
 • கைர்லாஞ்சி
 • அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்
 • அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்
 • முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கர் கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்
 • ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Sampath, G. (16 February 2019). "Who is Anand Teltumbde, and why was he arrested recently?". The Hindu.
 2. கட்சிரோலி போலீஸ் என்கவுன்டரில் 26 மாவோயிஸ்டுகள் பலி: முக்கிய தலைவர் மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டார்
 3. Deshmukh, Chaitraly (February 3, 2019). "Court rules against Pune police's Elgaar arrest". Mid-day.com.
 4. 4.0 4.1 "Anand Teltumbde". Goa Institute of Management. 28 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Anand Teltumbde – Executive Profile". Bloomberg. 10 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Anand Teltumbde". Indian Institute of Technology Kharagpur. 8 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 7. Gauree Malkarnekar (29 May 2018). "GIM's introduces country's first programme in Big Data Analysis".
 8. "Margin Speak". Economic and Political Weekly. 29 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 9. Teltumbde, Anand (20 August 2012). "It's Not Red Vs Blue". Outlook India.
 10. Teltumbde, Anand (24 May 2011). "The false Dalit of capital". Tehelka. 2 June 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 11. Teltumbde, Anand (28 February 2012). "Identity politics and the annihilation of castes". india-seminar.com. 29 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 12. Teltumbde, Anand (30 July 2011). "Corruption and injustice". india-seminar.com. 29 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
 13. "சாதியின் குடியரசு (நூல்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_டெல்டும்டே&oldid=3543215" இருந்து மீள்விக்கப்பட்டது