ஆனந்த் சாகர் ஏரி
தோற்றம்
| ஆனந்த் சாகர் ஏரி Anand Sagar Lake | |
|---|---|
| அமைவிடம் | பான்சுவாரா மாவட்டம், இராசத்தான், இந்தியா |
| ஆள்கூறுகள் | 23°32′46″N 74°28′30″E / 23.546°N 74.475°E |
ஆனந்த் சாகர் ஏரி (Anand Sagar Lake) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள பான்சுவாரா மாவட்டத்தில் உள்ளது. பாய் தலாபு என்ற பெயராலும் அழைக்கப்படும் ஆனந்த் சாகர் ஏரி ஒரு செயற்கை ஏரியாகும். பான்சுவாராவைச் சேர்ந்த இயக்மல் சிங் என்பவரால் தனது இராணி லாஞ்சி பாய்க்காக இந்த எரி கட்டப்பட்டது.[1][2]
ஏரியின் ஓரம் முழுவதும் கல்பவிரிக்சா மரங்களின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது