உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்தூர், ஊத்தங்கரை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,942
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635304

ஆனந்தூர் (ANANDUR) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

மக்கள்வகைப்பாடு

[தொகு]

இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 954 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,942 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,963, பெண்களின் எண்ணிக்கை 1,979 என உள்ளது.[2]

கோயில்கள்

[தொகு]

இந்த ஊரில் சோழர் காலத்திய பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கி.பி. 1188 ஆண்டைச் சேர்ந்த வீர்ராசேந்திர சோழன் காலத்திய கல்வெட்டு உள்ளது. இக்கோயில் இறைவன் தான்தோன்றீசுவரமுடைய நாயநார் என கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்.[3]

மேற்கோள்

[தொகு]
  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/uthangarai/anandur.html
  3. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். p. 118. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)