ஆனந்தா சங்கர் ஜெயந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனந்தா சங்கர் ஜெயந்த்
பிறப்பு1961 (அகவை 59–60)[1]
திருநெல்வேலி மாவட்டம் of தமிழ்நாடு
பணிபரதநாட்டியக் கலைஞர்
நடன அமைப்பாளர்
செயற்பாட்டு 
காலம்
1972 முதல்
அறியப்படுவதுபரதநாட்டியம்
குச்சிப்புடி
பெற்றோர்ஜி. எஸ். சங்கர்
சுபாசிணி
வாழ்க்கைத்
துணை
ஜெயந்த்
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாதமி விருது
கலா ரத்னா
நிருத்திய சூடாமணி
கலைமாமணி
நாட்டிய இளவரசி
குரு தேவிபிரசாத் விருது
இந்தியன் எக்சுபிரசு தேவி விருது
வலைத்தளம்
anandashankarjayant.com

ஆனந்தா சங்கர் ஜெயந்த் (Ananda Shankar Jayant) என்பவர் மரபார்ந்த நடனக் கலைஞர், வழிமுறைக் கலைஞர் (நடன ஆசிரியர்), ஆட்சித் துறைப் பணிக்குழு உறுப்பினர் ஆவார். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற நடனங்களின் மூலம் பிரபலமானவர்.[2] இவர் இந்திய இரயில்வேயின் முதல் பெண் அதிகாரி ஆவார்.[3] 2009 இல் டெட் (மாநாடு) புற்று நோய் பற்றிய கலந்துரையாடலின் மிகச் சிறந்த பன்னிரண்டு பேச்சாளர்களில் இவருடைய பெயரையும் அறிவித்தது.[4] ஆனந்த சங்கர் ஜெயந்த் சங்கீத நாடக அகாதமி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திரப் பிரதேச அரசின் கலா ரத்னா விருதினைப் பெறுள்ளார். இந்திய அரசின் நான்காவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்மசிறீ விருதினை 2007 ஆம் ஆண்டில் பெற்றார்.[5]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆனந்த சங்கர் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிராமணர் குடும்பத்தைச் சார்ந்தவர். இவருடைய தந்தை ஜி. எஸ். சங்கர் இந்திய இரயில்வேயில் பணிபுரிந்தவர். தாய் சுபாசினி பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். ஆனந்த சங்கர் ஐதராபாத்தில் தனது ஆரம்பகால வாழ்க்கையை வாழ்ந்தார்.சிக்கந்தராபாத்திலுள்ள புனிதர் ஆன் உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பப்பள்ளிப் படிப்பை மேற்கொண்டார்.[6] மரபார்ந்த நாட்டியக் கலைகளை தனது நான்காம் அகவையில் இருந்து சரதா கேசவா ராவிடமும் பின் கே. என். பக்கிரிசாமியிடமும் கற்றார். பின் பதினொரு வயதாக இருக்கும் போது 1972 இல் ருக்மிணி தேவி அருண்டேலின் கலாசேத்திரா கவின் கலைக்கல்லூரியில் பத்ம பாலகோபால், சரதா ஹோஃப்மென், கிருஷ்ணவேனி லட்சுமணன் போன்றோரிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். ஆறு ஆண்டுகள் படிப்பிற்குப் பிறகு பரதநாட்டியம், கருநாடக இசை, வீணை,நடனக் கோட்பாடு போன்றவைகளில் பட்டயம் பெற்றார். பின்பு பதினேழு வயதாக இருக்கும் போது ஐதராபாத்து (இந்தியா) சென்று அங்கு சங்கரானந்தா கலாசேத்திரா எனும் பெயரில் நடனப் பள்ளியை எட்டு மாணவர்களுடன் தொடங்கினார். பின்னர் அது நடனக் கலைஞர் மன்றமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு பார்த்தா கோசு, மிருனாளினி சுந்துரி, சதிராஜு வேனுமாதவ் மற்றும் தோலன் பானர்ஜி ஆகியோர் உதவினர்.[7] ஐதராபாத்தில் பசுமார்த்தி ராமலிங்க சாஸ்திரியிடம் குச்சிப்புடி நடனம் கற்றார்.[8] அதேசமயத்தில் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின் இவர் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று இந்திய இரயில்வே போக்குவரத்து நெரிசல் சேவையில் சேர்ந்ததன் மூலம் இந்தப் பணி வாய்ப்பு பெற்ற முதல் பெண் என்ற சிறப்பினைப் பெற்றார்.[9]

விருதுகள்[தொகு]

தமிழ்நாடு அரசு இவருக்கு 2002 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கி பெருமைப்படுத்தியது.[10] ஸ்ரீ சண்முகாணந்தா சங்கீத சபை இவருக்கு நாட்டிய இளவரசி விருதினை அளித்தது. 2006 ஆம் ஆண்டில் ஸ்ரீ கிருஷ்ணா கான சபை நிருத்திய சூடாமணி எனும் விருதினை சென்னையில் வழங்கியது.[11] இந்திய அரசாங்கம் 2007 இல் பத்மசிறீ விருதினை வழங்கியது. அதே ஆண்டில் சிக்கந்தராபாத்திலுள்ள கலசாகரம் அமைப்பானது இவருக்கு நிருத்திய கலாசாகரா எனும் விருதினை வழங்கியது.[12] ஆந்திரப் பிரதேச அரசு 2008 இல் உகாதி நாள் அன்று கலாரத்னா விருதினை வழங்கியது. பரதநாட்டியத்தில் இவரின் பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக சங்கீத நாடக அகாதமி விருது 2009 இல் வழங்கப்பட்டது

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "A life in ‘mudra’". Live Mint (26-08-2015). பார்த்த நாள் 25-08-2016.
 2. "Ananda Shankar Jayant: She who danced her way through cancer and conquered it". India Today (3-11-2015). பார்த்த நாள் 25-08-2016.
 3. "Ananda Shankar Jayant : The First Lady IRTS Officer of South Central Railway,Indian Railways". Delhi University (2015). பார்த்த நாள் 24-08-2016.
 4. "12 Incredible TED Talks on Cancer". Masters in Healthcare (2016). பார்த்த நாள் 25-08-2016.
 5. "பத்ம விருதுகள்". இந்திய அரசு (2013). மூல முகவரியிலிருந்து 14-11-2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஆகஸ்டு 20, 2016.
 6. "Padmashri Ananda Shankar Jayant – Part 1". August 20, 2011. Coffee with Sundar. பார்த்த நாள் August 25, 2016.
 7. "Shankarananda Kalakshetra presents Kavyanjali". Narthaki (August 23, 2016). பார்த்த நாள் August 25, 2016.
 8. Lalitha Venkat (November 23, 2006). "Dance - the essence of my life". Narthaki. பார்த்த நாள் August 25, 2016.
 9. "The cancer conqueror". ReDiff (June 1, 2015). பார்த்த நாள் August 25, 2016.
 10. "Kalaimamani awards announced". The Hindu (October 11, 2003). பார்த்த நாள் August 25, 2016.
 11. "Highlights - November 2007". Narthaki (2007). பார்த்த நாள் August 25, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]