ஆனந்தவாடி

ஆள்கூறுகள்: 11°11′22″N 79°10′37″E / 11.189396°N 79.176844°E / 11.189396; 79.176844
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தவாடி

Anandavadi

ஆனந்தவாடி
இருப்பிடம்: ஆனந்தவாடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°11′22″N 79°10′37″E / 11.189396°N 79.176844°E / 11.189396; 79.176844
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
வட்டம் செந்துறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி சிதம்பரம்
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி குன்னம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். எஸ். சிவசங்கர் (திமுக)

மக்கள் தொகை 4,262 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


77 மீட்டர்கள் (253 அடி)

குறியீடுகள்


ஆனந்தவாடி (ஆங்கிலத்தில் : Anandavadi) என்பது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில், உள்ள ஒரு கிராமமாகும்.

நிகழ்வுகள்[தொகு]

இவ்வூரில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜம்பத்திரெண்டு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அரசு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்கப்பட்டு, சுண்ணாம்பு ஆலை இயங்கி வருகின்றது. அப்போது அதர்க்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலை தருவதாக ஆலை நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை யாருக்கும் அவர்கள் வேலை வழங்கவில்லை. எனவும் மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் எனவும். நிலம் வழங்கிய கிராமமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.[3] மேலும் இவ்வூரில் வாடிகருப்பு என்று அழைக்கப்படும் ஆனந்தவாடி கருப்பசாமி கோயில் இக்கிராமக் காவல் தெய்வங்களுள் ஒன்றாக இவ்வூர் மக்களால் வழிபட்டு வருகின்றனர்.

மக்கள்வகைப்பாடு[தொகு]

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி 2011 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு அறிக்கையின்படி 4262 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 2108 பேர் ஆண்கள், 2154 பேர் பெண்கள் ஆவார்கள். ஆனந்தவாடி கிராம மக்களின் சராசரி கல்வியறிவு 65.28 % ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் 273, பெண் குழந்தைகள் 219, ஆவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஆனந்தவாடியில் சுண்ணாம்பு ஆலை -- தமிழில்
  4. 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை-- ஆங்கிலத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தவாடி&oldid=3643145" இலிருந்து மீள்விக்கப்பட்டது